சமையல் கேஸ்.. அமெரிக்காவின் மிகப்பெரிய விருப்பம்.. கிரீன் சிக்னல் காட்டிய இந்தியா.. லாபகரமானதா?
சென்னை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்தியாவின் வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். அப்படி அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்குவது இந்தியாவிற்கு லாபமா நஷ்டமா... தற்போதைய நிலையில் சந்தை நிலவரங்கள் எப்படி உள்ளன என்பதை பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றார். அதன்பின்னர் அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை கொண்டு வந்தார். அந்த கொள்கையின்படி வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, 25 சதவீதம் தண்டனை வரி விதித்தார். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு 50 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறைகிறது
இந்த வரிவிதிப்பை குறைக்க இரு தரப்பினர் இடையே தொடர்ந்து வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை டிரம்ப் ஒருமுறை கூறியிருந்தார்.
இந்தியா தகவல்
தற்போது இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படும் என இந்தியாவின் வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன்மூலம் 50 சதவீத வரிவிதிப்புக்கு தீர்வு காணப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமையல் எரிவாயு இறக்குமதி
வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் பற்றியும் கூறுகையில், 2026-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கின்றன. இது நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் உள்ள ஒன்று. இது இருதரப்பு வர்த்தக உறவுக்கான பகுதியாக இல்லை. இருப்பினும் இருநாடுகளிடையேயான வர்த்தக உறவை சமப்படுத்த நமது முயற்சியின் ஒரு பகுதி" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு என்னென்ன லாபம்:
இந்தியா தனது சமையல் எரிவாயு இறக்குமதியில் 90% க்கும் அதிகமாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளையே நம்பி உள்ளது. பொதுவாக வளைகுடா நாடுகளில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும்போது இந்த நம்பகத்தன்மை இந்தியாவைப் பாதிக்கப்படுகிறது. அதேநேரம் அமெரிக்காவுடன் நீண்ட கால ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்வதன் மூலம், ஒரு குறிப்பிட்டப் பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு புவிசார் அரசியல் நெருக்கடியிலும் எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றும் இது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் கூறுகிறார்கள்.
விலை நிர்ணயம்
அதேபோல் மத்திய கிழக்கு நாடுகள் சவுதி அராம்கோ ஒப்பந்த விலையை அடிப்படையாகக் கொண்டு எல்பிஜி விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அமெரிக்க LPG, மவுண்ட் பெல்வியூ என்ற உலகப் பொருளாதார மையத்தை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தியாவிற்கு சாதகம்
எனவே இந்த இரண்டு விலை நிர்ணய முறைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பயன்படுத்தி, இந்தியா சிறந்த விலையில் எல்பிஜி பெற விரும்பும். எனவே மிகப்பெரிய இறக்குமதியாளர்களில் ஒருவரான இந்தியாவின் சந்தையை இழக்க விரும்பாத மத்திய கிழக்கு நாடுகள், தங்கள் சந்தையைத் தக்கவைக்க விலையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இந்திய மக்களுக்கு சமையல் கியாஸ் விலை குறைவாகவே கிடைக்கும். ஒரு போட்டி ஏற்படும் போது தானாகவே விலை குறையும் என்பது தான் இதன் சாராம்சம்.
டிரம்ப் புலம்ப மாட்டார்
அதேபோல் இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக உபரி இருக்கிறது. அதாவது, ஏற்றுமதியை விட இறக்குமதி குறைவாக உள்ளதாக டிரம்ப் இன்று வரை புலம்பி வருகிறார். அதுதான் டிரம்ப் இப்படி வரி விதிக்க ஒரு காரணமாக இருக்கிறது. எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வு குறையும். இது இரு நாடுகளின் நல்லுறவுக்கும், எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் சாதகமாக அமையக்கூடும்.
10 சதவீதம் தேவையை பூர்த்தி செய்யும்
இந்தியா அமெரிக்கா இடையிலான சமையல் கியாஸ் ஒப்பந்தம் என்பது இந்தியாவின் வருடாந்திர எல்பிஜி இறக்குமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை (சுமார் 2.2 மில்லியன் டன்) பூர்த்தி செய்யும் என்கிறார்கள். எனவே தற்போது நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்ய இந்த ஒப்பந்தம் உதவும் என்று மத்திய அரசு நம்புகிறது.
சிக்கல்கள் என்னென்ன
மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவிலிருந்து எல்பிஜியை இறக்குமதி செய்ய கடல் வழிப் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கும். இது ஒட்டுமொத்த விலையை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா எந்த நேரம் எப்படி முடிவெடுக்கும் என்று யாருக்கும் தெரியுமா..குறிப்பாக அதிபர் டிரம்ப் எப்படி செயல்படுவார் என்று யாருக்குமே தெரியாது. எனவே எதிர்காலத்தில் அவரது திடீர் முடிவுகள் இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
-
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி!












Click it and Unblock the Notifications