Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு கேபிள் கட்டணம் உயர்கிறதா? தீவிர ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்.. ஆஹா!

சரிவில் இருக்கும் அரசு கேபிள் டிவி இணைப்புக்கான கட்டமைப்புகளை சீர்திருத்துதல் மற்றும் சேவை தொடர்பான புகார்களை விரைந்து சரிசெய்வதில் தமிழக அரசு இறங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணம், சொத்து வரி ஆகியவை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தான் சரிவில் இருக்கும் அரசு கேபிள் டிவி இணைப்புக்கான கட்டமைப்புகளை சீர் திருத்துவது, சேவை தொடர்பான புகார்களை விரைந்து சரி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு கேபிள் டிவிக்கான மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் பரவிய நிலையில் அதுபற்றிய கேள்விக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் பரவியது.

தனியார் கேபிள் சேவையாளர்களின் கட்டணத்தோடு ஒப்பிடும்போது அரசு கேபிள் டிவி இணைப்பு கட்டணம் மலிவாக உள்ளது. இதனால் கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

சரிவில் இருக்கும் அரசு கேபிள் டிவி இணைப்புக்கான கட்டமைப்புகளை சீர் திருத்துவது, சேவை தொடர்பான புகார்களை விரைந்து சரி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் தான் சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் பங்கேற்பு

அமைச்சர் பங்கேற்பு

இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தின் முடிவில் மனோ தங்கராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் தமிழ்நாடு அரசு கேபிளுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

கட்டணம் உயர்த்த முடிவா?

கட்டணம் உயர்த்த முடிவா?

அதற்கு மனோ தங்கராஜ், ‛‛மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதையே மத்திய அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. மக்களிடம் இருந்து பணத்தை மத்திய அரசு பிடுங்கி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜிஎஸ்டி வரி மக்களை துன்புறுத்தி வருகிறது. தமிழக அரசை பொறுத்தமட்டில் மக்களை பாதிக்காத வகையில் ஓரளவு சமரசம் செய்யும் முயற்சியில் உள்ளோம். இதனால் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க முடிவு செய்துள்ளோம். எனவே அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை'' என்றார்.

கூடுதல் சேனல்களுடன் உயர்வா?

கூடுதல் சேனல்களுடன் உயர்வா?

அமைச்சர் இப்படி கூறினாலும் கூட விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் கட்டணம் என்பது உயர்த்தப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. மாறாக தற்போதைய சேவையை விட கூடுதல் சேனல்கள் மற்றும் புதிய வசதிகள் அறிமுகத்துடன் புதிய கட்டண உயர்வு மேற்கொள்ளலாம் என்ற வகையில் அரசு ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அரசு கேபிள் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக இன்னொரு தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அரசு தரப்பில் இன்னும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+