Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள்,ஆசியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி? தொடங்கியது மீட்டிங்.. அமைச்சர்கள் பேசுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று காலையிலேயே அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். இதில் 2004ம் ஆண்டு முடிவுக்கு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்கள் பயன்பெற்றார்கள். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டம் அவர்களுக்கு போதிய பயனுள்ளதாக கிடையாது. இதனால் தான் போராடி வருகிறார்கள். திமுக கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் பழைய ஒய்வூதியம் குறித்து குழு அமைத்து பரிசீலிப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4.5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் நிறைவேறவில்லை

old pension scheme Government employees

இதனால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். முன்னதாக கடந்த டிசம்பர் 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்காக முறைப்படி நோட்டீசும் வழங்கி உள்ளார்கள்.

இந்த சூழலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் வருகிற 22-ந் தேதி கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி , அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்த சூழலில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 5 சதவீதத்துக்கு மேல் பணிநியமனம் செய்யக்கூடாது என்பதை ரத்து செய்திட வேண்டும். தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வினையும் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இந்நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு விரும்புகிறது. இதற்காக இன்று அமைச்சர்கள் குழுவினரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை தற்போது அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், சுமூக உடன்பாடு எட்டப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+