பணக்காரர்களை பழிவாங்கும் டைட்டானிக்.. மூழ்கிய எல்லோரும் கோடீஸ்வரர்கள்.. ஆ உடம்பே சில்லிடுதே!
சென்னை; டைடானிக் கப்பலில் ஏகப்பட்ட பணக்காரர்கள் பலியான நிலையில் தற்போது டைட்டன் கப்பலில் கடலில் மூழ்கியவர்களும் பணக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.

இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்ற இந்த கப்பலில் ஏகப்பட்ட பணக்காரர்கள் இருந்தனர். 2,208 பயணிகளில் கிட்டத்தட்ட 1500 பேர் கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள். போகிற வழியில் கப்பல் 1912 ஏப்ரல் 15 அதிகாலையில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சம்பவ இடத்திலேயே இதன் விளைவாக 1513 பேர் இறந்தனர்..
டிக்கெட்டின் விலையின் அடிப்படையில் கப்பலின் பயணிகள் மூன்று தனித்தனி வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர்: முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் பெரும்பாலோர் செல்வந்தர்கள், உயர் வகுப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், உயர்மட்ட இராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், பொழுதுபோக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இரண்டாம் வகுப்பு பயணிகளில் பெரும்பாலும் நடுத்தர வர்க்க பயணிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். மூன்றாம் வகுப்பு அல்லது ஸ்டீயரேஜ் பயணிகள் முதன்மையாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் குடியேறியவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் டைட்டானிக் ஜாக் கதாபாத்திரம் போல சீட்டு கட்டில் வென்று அல்லது கடன் வாங்கி அமெரிக்காவிற்கு குடியேற சென்றவர்கள். இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். இப்போது அதே டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் கப்பலில் பயணம் செய்த பணக்காரர்களும் பலியாகி உள்ளனர்.
டைட்டன் நீர் மூழ்கி: கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.
இதை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி வெடித்த நிலையில் 110 மணி நேர சோதனைக்கு பின் கப்பல் வெடித்தது உறுதி செய்யப்பட்டது. நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கப்பல் வெடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யாரெல்லாம் சென்றனர்?: இந்த முறையும் டைட்டானிக் கப்பல் பயணத்தில் பணக்காரர்கள் மரித்துள்ளதால் பணக்காரர்களை டைட்டானிக் கப்பலுக்கு பிடிக்கவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இரண்டு முறை பணக்காரர்களை டைட்டானிக் கொன்றுவிட்டதாக நெட்டிசன்கள் போஸ்ட் செய்துள்ளனர். இந்த முறை கடலில் மூழ்கிய டைட்டன் கப்பல் டைட்டானிக் கப்பலில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் வெடித்தாக கூறப்படுகிறது.
இந்த பயணத்தில்.. 3,800 மீ ஆழத்தில் உள்ள டைட்டானிக் இடிபாடுகளை காண்பது உட்பட, எட்டு நாள் பயணத்திற்கான டிக்கெட்டுகளின் விலை டாலர் 250,000 (ரூபாய் 2 கோடி ஒரு டிக்கெட்) ஆகும். உலகில் உள்ள பயண நீர்மூழ்கி கப்பல்களில் ஒரு சில மட்டுமே இது போல 4 ஆயிரம் அடி வரை மூழ்கும் திறன் கொண்டது. இது மிகவும் காஸ்டலியான பயணம் என்பதால் கோடீஸ்வரர்கள் மட்டுமே செல்ல முடியும்.
இந்த கப்பலில் பயணம் செய்த பயணிகள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டன் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்.
பாகிஸ்தான் தாவுத்: இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, ஆகியோர் பயணம் செய்து உள்ளனர். இவர் பிரிட்டிஷ் தொழிலதிபர் என்றாலும் பாகிஸ்தான்தான் இவரின் பூர்வீகம்.
ஷாஜதா தாவூத், 48, பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரின்ஸ் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தில் போர்ட் உறுப்பினராகவும் உள்ளார்.எங்ரோ கார்ப்பரேஷனின் துணை தலைவராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனம் உரங்கள், உணவு மற்றும் எரிசக்தி உற்பத்தி செய்கிறது. இவர் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் உலகளாவிய டெஸ்டிங் மார்க்கெட்டிங் பிரிவில் எம்.எஸ்சி. மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தவர். இவர் ரசாயனங்கள் தயாரிக்கும் தாவூத் ஹெர்குலஸ் கார்ப்பரேஷனின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
பாகிஸ்தானிலேயே பணக்கார குடும்பங்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று. சுற்றுலாவில் அதிக ஆர்வம் கொண்ட இவர் டைட்டானிக்கை பார்க்க சென்று கடலில் மரித்து போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹார்டிங் யார்?: இதில் பயணம் செய்து காணாமல் போன ஹார்டிங் உலகெங்கிலும் தனது ஆய்வுப் பயணங்களுக்கு பெயர் பெற்றவர். இவருக்கும் இந்தியாவிற்கும் முக்கிய தொடர்பும் கூட உள்ளது. நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு எட்டு காட்டு சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த மோடி அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செய்தது இவர்தான். அந்த நிகழ்வில் இவர் மோடியுடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தனது பிறந்தநாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அந்த எட்டு சிறுத்தைகளை விடுவித்தார். அதற்கு பின் இருந்த மாஸ்டார்மைன்ட் ஹார்டிங். அந்த நீர்மூழ்கி கப்பலில் இவரும் பலியாகிவிட்டார். அவரது நண்பரும் ஓய்வுபெற்ற விண்வெளி வீரருமான கர்னல் டெர்ரி விர்ட்ஸ், ஹார்டிங்கிடம் இருந்து அவர் புறப்படுவதற்கு முன்பு கடைசியாகப் பெற்ற மெசேஜ் பற்றி தகவல் வெளியிட்டு உள்ளார்.
ஸ்டாக்டன் ரஷ் யார்?: இது போக இன்னொரு பயணி ஸ்டாக்டன் ரஷ் ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர், 2009 இல் OceanGate ஐ இவர்தான் தொடங்கினார். இந்த பயணத்தை மேற்கொண்ட தி டைடன் கப்பல் இந்த நிறுவனத்துடையதுதான். இவர்தான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டி 19 வயதிலேயே கப்பல், விமானம் ஓட்ட கற்றுக்கொண்டவர். பல நாடுகளுக்கு அந்த வயதிலேயே பயணம் செய்தவர். ஸ்டாக்டனுக்கும் டைட்டானிக் கப்பலுக்கும் வேறு ஒரு நெருக்கமான தொடர்பும் உள்ளது.
1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இந்த ஸ்டாக்டன் ரஷ்ஷின் மனைவி விண்டி ரஷ்ஷின் தாத்தா இசடோர் ஸ்ட்ராஸின் மற்றும் விண்டியின் பாட்டி பயணம் செய்து மரித்து உள்ளனர். டைட்டானிக் கப்பலில் 1912ல் மரித்த இசடோர் ஸ்ட்ராஸின் கொள்ளுப் பேத்திதான் விண்டி. கப்பலில் மரித்த இந்த தாத்தா, பாட்டிகளின் மருமகன் ஸ்டாக்டன்தான் இப்போது மூழ்கி இருக்கும் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பைலட். பாருங்கள் மாமனார், மாமியார் டைட்டானிக் கப்பலில் பலியாக அவர்களின் பேத்தியின் கணவர் டைட்டானிக்கை பார்க்க போன டைட்டன் கப்பலில் பலியாகி உள்ளார்.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications