"சாயும் காம்ரேட்".. அதிமுக கரெக்ட்டா இருக்கே.. ஆஹா, பாலகிருஷ்ணனுக்கு வந்த திடீர் கரிசனம்.. அப்ப திமுக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: கூட்டணியில் உள்ளவர்கள் ஒத்த கொள்கையுடன்தான் இருக்க வேண்டும் என்றால், என்பது அவசியமில்லை.. அடிப்படை கொள்கை வேறாக இருந்தாலும், சில விஷயங்களில் ஒன்றுபடுகிறோம் என்று சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஆதரித்துள்ளது.. அத்துடன், தமிழ்நாட்டில் ஆணையம் அமைத்து அமல்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

எக்கச்சக்கம்
திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் முரண்பாடுகள் விவாதப்பொருளாகி வருகின்றன.. இது கூட்டணியை பாதிக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது.. இந்நிலையில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் இந்த சந்தேகங்களை அவரிடம் முன்வைத்தோம்.. மேலும் இந்த கருத்து முரண்பாடுகள், களத்துக்கு செல்லும்போது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

ஊசலாட்டம்
"அதிமுக - பாஜக கூட்டணி முரண்பாடுள்ள கூட்டணி என்று சொல்கிறபோது, என்றைக்குமே இந்துத்துவாவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அதிமுக சொன்னதில்லை.. பாஜகவின் அடிப்படை கோட்டுபாடுகளை ஏற்றுக் கொள்வதாக அதிமுக அறிவிக்கவில்லை.. மைனாரிட்டி மக்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்றோ, அந்த மக்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்றோ அதிமுக சொல்லவுமில்லை.. அதனால், இன்றைக்கு அதிமுக பாஜகவுடன் இருந்தாலும், சில பிரச்சனைகளில் ஊசலாட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. இருந்தபோதிலும், மதச்சார்பற்ற கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது..

தகர்கிறது
எங்களுக்கும் அவங்களுக்கும் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் இன்றைக்கும் அதிமுக மதசார்பற்ற கட்சிதான்.. சந்தர்ப்ப சூழலினால் பாஜகவை விட்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை.. அதேபோல திமுக கூட்டணியிலும் பல பிரச்சனைகள், பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.. ராஜீவ்காந்தி கொலையாளிகள் பிரச்சனையில் வேறுபாடு உள்ளது.. ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரம் குறித்து திமுகவுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.. இந்த இடஒதுக்கீடு குறித்து எங்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும்.. அதனால், கூட்டணி என்று சொல்லிவிட்டாலே, எல்லா கட்சிகளும் ஒரே விஷயத்தில் நிலை நிற்க வேண்டும் என்றெல்லாம் பார்க்க முடியாது.. மாறுபட்ட நிலைப்பாடு என்பது கண்டிப்பாக இருக்க கூடும்..

CPM + CPI
திமுக அடிப்படை கொள்கையும், எங்களுடைய அடிப்படையான கொள்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது.. காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ எல்லாருமே அடிப்படை கொள்கை விஷயத்தில் ஒரே மாதிரியாக இருக்க முடியும் என்று சொல்ல முடியுமா? ஆனால், அடிப்படையில் எல்லாருமே மதசார்பற்ற கட்சிகள்தான் நாங்கள்.. மாநில உரிமைகள் வேண்டும் என்று சொல்லக்கூடிய கட்சிகள்நாங்கள்.. மாநில மொழியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லும் கட்சிகள்.. கூட்டாட்சி தத்துவத்தை வற்புறுத்தக்கூடிய கட்சிகள் நாங்கள்.. இப்படியான உடன்பாடுகள் எங்களுக்குள் இருக்கிறது..

ஒத்த கொள்கை
கூட்டணியில் உள்ளவர்கள் ஒத்த கொள்கையுடன்தான் இருக்க வேண்டும் என்றால், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் எதுக்கு தனித்தனியாக செயல்படணும்? எல்லா கட்சியும் ஒரே கட்சியாக செயல்படலாமே? அதனால்தான், அடிப்படை கொள்கை வேறாக இருந்தாலும், சில விஷயங்களில் ஒன்றுபடுகிறோம்.. மதவாத சக்தி ஆட்சியில் உள்ளபோது, மதவாதத்தை பரப்புகிறபோது, மாநில சுயாட்சியை பறிக்கிறபோது, இந்துத்துவாவை திணிக்கிறபோது, மக்களுடைய கல்வி உரிமையை பறிக்கிறபோது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கிற விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.. அதனால், திமுகவுக்கும், எங்களுக்கும் பெரிய அளவிலான முரண்பாடுகள் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications