சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பிச்சாச்சு.. யார் அந்த "முக்கிய புள்ளி".. சரமாரியாக புகார்.. ஓரம் கட்டும் திமுக தலைமை!

: திமுக அமைச்சர் மீது உறுதிப்படுத்தப்படாத புகார் ஒன்று எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக, எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக ஆட்சியை நடத்தினாலும், அவ்வப்போது ஏதாவது ஒரு புகார் வெடித்து விடுகிறது.. அல்லது எதையாவது, ஒன்றை கொளுத்தி போட்டுவிட்டு, அந்த நெருப்பில் ஒருசிலர் குளிர் காய்வதும் நடக்கிறது.. இப்போதும் அப்படித்தான் ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை!

10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சிக்கு வந்துள்ள திமுக, இந்த முறை பொறுப்பேற்றதில் இருந்தே ஒருசில குறிக்கோள்களை வகுத்து செயல்பட்டு வருகிறது..

சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6) சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6)

திமுக தொண்டர்கள் யார் அராஜகத்தில் ஈடுபட்டாலும்சரி, அவர்கள் மீது தயவுதாட்சண்யம் பார்க்காமல் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

 புகார்

புகார்

அதேபோல, எந்த துறை அமைச்சர்கள் மீதான புகார்கள் வந்தால், அவைகள் உறுதியானால், அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையை, ஸ்டாலின் பதவியேற்ற முதல்நாளே விடுத்திருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு செய்தி தமிழக அரசியலில் பரபரத்து வருகிறது.

 வலதுகரம்

வலதுகரம்

ஸ்டாலினின் வலது கரமாக செயல்பட்டவராம் அந்த மாவட்டச் செயலாளர்.. கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.. தேர்தல் சமயத்தில், தன்னுடைய கருத்துகளை கூட்டணிக் கட்சியினரிடம் தெரிவிப்பதற்காக, ஸ்டாலின் இவரைதான் தேர்ந்தெடுத்தார்.. கட்சியினருக்கும் தேர்தல் செலவுகளுக்காக பணமும் இவர் மூலம்தான் சென்றதாம்.. தற்போதைய மிக இவருக்கு ஸ்டாலின் தந்திருக்கிறார்..!

கணக்கு

கணக்கு

ஆனால், தேர்தல் நேரத்தில் சேரவேண்டிய தொகை போய் சேரவில்லை என்றும் அதற்கான கணக்கும் காட்டப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, தன்னுடைய கல்வி நிறுவனம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒரு நெருக்கடி தொடர்பாக நேரில் சென்று சந்தித்து பேசினாராம்..

 உண்மையா?

உண்மையா?

இந்த தகவல்கள் எல்லாம் ஸ்டாலினின் கவனத்துக்கு சென்றுள்ளதாகவும், இதையடுத்து அவரை ஓரங்கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.. அவர் யார்? என்று தெரியவில்லை.. இந்த தகவல்கள் உண்மையா என்றும் தெரியவில்லை.. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவரை டம்மி செய்யவும் முதல்வர் தயங்கமாட்டார் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிறையவே உள்ளது.

English summary
Is there a sudden complaint against the DMK Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X