“ஸ்கெட்சு” ஸ்டாலினுக்கா?” பிரதமர் வேட்பாளர் பேச்சு.. மறுநாள் பாஜக பரப்பிய வட மாநில தொழிலாளர் வதந்தி
"பீகாரிகளுக்கு எதிராக செயல்படும் ஸ்டாலினுடன் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வந்திருப்பதாக அம்மாநில பாஜக குற்றம்சாட்டியது"
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டு கொல்லப்படுவதாக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சமூக வலைதளங்கள் மற்றும் முன்னணி ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"அமைதி, மரியாதை, கண்ணியத்தோடு வாழ இந்தியாவை கட்டமைக்க பிற தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஸ்டாலினால் இதற்கு நிச்சயம் உதவ முடியும். அவர் தேசிய அளவில் பணியாற்ற முன்வர வேண்டும். தமிழ்நாட்டைபோல் தேசியத்தையும் கட்டமைக்க வேண்டும்."
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆற்றிய உரை இது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பிலும், "மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது?" என்று தெரிவித்தார் பரூக்.

ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அவர் பேசிய மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சாதாரணமானது அல்ல. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய அரசியல்
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து பெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில் தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின் மூலமாக அதை தொடங்கி வைத்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் அவர் தேசிய அரசியலில் நுழைந்து விட்டார் எனவும் பேசி வருகிறார்கள்.

தேசிய ஊடகங்கள்
ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்த செய்திகளும், அதில் தேசிய தலைவர்கள் ஆற்றிய உரையும் தமிழ் மட்டுமின்றி தேசிய ஊடகங்களையும், பல மாநில ஊடகங்களையும் ஆக்கிரமித்தன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணிக்காக பணியை தமிழ்நாட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பரவிய வதந்திகள்
நிலைமை இவ்வாறு இருக்க மறுநாளே இந்த செய்திகளும் அது தொடர்பான விவாதங்களும் தேசிய ஊடகங்களைவிட்டு மறைந்தன. மாறாக தமிழ்நாடு மக்கள் இந்தி பேசும் மக்களுக்கு எதிரானவர்கள் என்றும், குறிப்பாக பீகார் மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின.

பாஜக பிரமுகர் மீது வழக்கு
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கி கொல்லப்பட்டுவதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மக்களுக்கு எதிரானவர் என்ற சித்தரிப்பும் உருவாக்கப்பட்டது. இதை முதலில் தொடங்கி வைத்தது பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்தான். அக்கட்சியை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ்தான் இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது தூத்துக்குடி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
அதேபோல் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீதும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைலேந்திர பாபு விளக்கம்
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவும் தமிழ்நாட்டு மக்கள் மீது அவதூறு பரப்படுவதாக கூறி ஆதாரத்துடன் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். அதே நேரம் பீகாரிகளுக்கு எதிராக செயல்படும் ஸ்டாலினுடன் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வந்திருப்பதாக அம்மாநில பாஜக குற்றம்சாட்டியது.

தேஜஸ்வி யாதவ் விளக்கம்
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை என்று விமர்சித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு வந்த பீகார் அரசின் உண்மை கண்டறியும் குழு, அப்போது வதந்திகள் பகிரப்படுவதாக விளக்கமளித்தது.

அண்ணாமலை மீது வழக்கு
இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று அக்கட்சியின் மாநில தொழிற்பிரிவு தலைவர் செல்வகுமாரும் கோவை மற்றும் சென்னையில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ஸ்டாலினுக்கு எதிரான சதியா?
ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு கிளம்பி இருக்கும் நிலையில், வட மாநில மக்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் இதே கருத்தைதான் தெரிவித்து இருக்கிறார்.

ஜோதிமணி விளக்கம்
அதில் "தமிழகம், பீகார் இரண்டு மாநிலங்களிலும் பதற்றத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம். இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இங்கே வெற்றிபெற முடியாது. தமிழக பாஜக நிச்சயம் இச்சதிசெயலுக்கு துணை நிற்கும். இதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்காமல், நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட்ட ஒரு சதிசெயலாகவே அணுக வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications