"மோட்டல்களில் டாய்லெட் போக ரூ.5".. உணவக டெண்டரா கக்கூஸ் டெண்டரா? அரசு மீது அறப்போர் இயக்கம் ஆவேசம்!
சென்னை: சாலையோர உணவகங்களில் (மோட்டல்) பெரும்பாலான பயணிகள் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துவதால் இனி அந்த உணவகங்கள் கழிவறை பயன்படுத்துபவர்களிடம் 5 ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம் என்று டெண்டர் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளதை அறப்போர் இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, சாலையோர உணவகங்களில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்துவார்கள். பெரும்பாலும், அரசுப் பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரம், மிக மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதிலும், கழிவறைகள் ஒழுங்காகப் பராமரிக்கபடாமலும், ஆனால், கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் கொடுமையும் நிகழ்கிறது.

சாலையோர உணவகங்களின் கட்டண கொள்ளை மற்றும் தரமற்ற உணவால், பெரும்பாலான பயணிகள் அங்கு உணவு உண்பதே இல்லை. வேறு வழியின்றி கழிப்பறையை பயன்படுத்துவார்கள். உணவு விற்பனையின் மூலம் தங்களுக்கு வருமானம் வரவில்லை எனக் கூறி, கழிப்பறைக்கு கட்டணம் வசூலிக்க டெண்டர் விதிமுறைகளில் மாற்றம் கோரினர் உணவக உரிமையாளர்கள். அதை அரசும் ஏற்று டெண்டர் விதிகளில் கழிப்பறைக்கு ரூ.5 வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு அறப்போர் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசியுள்ள அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன், "அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாரும் இந்த பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சாப்பிடுவதில்லை என்பதாலும் அவர்கள் அங்கே இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துவதாலும் இனி அந்த உணவகங்கள் கழிவறை பயன்படுத்துபவர்களிடம் 5 ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம் என்று டெண்டர் விதிகளில் திமுக அரசு திருத்தம் செய்துள்ளது.
தரமான சுவையும் இல்லை, சரியான விலையும் இல்லை. அதனால் மக்கள் சாப்பிடுவதில்லை. இதை சரி செய்து மக்களுக்கு தரமான உணவை சரியான விலையில் கிடைக்க உறுதி செய்தால் அது மக்கள் நல அரசு. ஆனால் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை கழிவறைக்கு எப்படியும் போவார்களே அப்போ அங்கே 5 ரூபாய் பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு அரசாங்கம் விதியை மாற்றுவது எவ்வளவு அசிங்கம் தெரியுமா?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இந்த வேலையை செய்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெட்கப்படனும். அதன் அதிகாரிகளும், அமைச்சரும் மக்களுக்கு துரோகம் செய்து உணவக உரிமையாளர்கள் வருமானத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளார்கள்.
ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு முதலுதவி பெட்டி வைக்க சொல்ல வக்கில்லாமல் கழிவறைக்கு கட்டணம் வாங்க கிளம்பி இருக்கும் போக்குவரத்து கழகத்துக்கு அறப்போர் கடும் கண்டனங்களை மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறது. இந்த டெண்டர் விதியை திருத்தி கழிவறை கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள். மக்களுக்கு இந்த துரோகத்தை செய்து விட்டு நீங்கள் தப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உணவக டெண்டரா இல்லை கக்கூஸ் டெண்டரா?
— Arappor Iyakkam (@Arappor) August 26, 2023
அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாரும் இந்த பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சாப்பிடுவதில்லை என்பதாலும் அவர்கள் அங்கே இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துவதாலும் இனி அந்த உணவகங்கள் கழிவறை பயன்படுத்து 5 ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம் என்று… pic.twitter.com/gRi9KYXCQz
அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் தரமும் சரியில்லை விலையும் அதிகம். அந்த காரணத்தினால் தான் மக்கள் அங்கே சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் பயணத்தின் போது கழிவறை பயன்படுத்துவது அத்தியாவசிய தேவை. தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசாங்கம் கழிவறைக்கு காசு வாங்கி கொடுக்கும் வேலையை செய்வது கேவலத்திலும் கேவலம்.
உணவக உரிமையாளர்கள் அனைவரும் வந்து MD இளங்கோவனிடம், ஐயா ஐயா எங்க உணவகத்தில் யாருமே சாப்பிடுவதில்லை, கழிவறை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் நாங்கள் உணவகம் நடத்தி சம்பாதிப்பதற்கு பதிலாக கழிவறைக்கு காசு வாங்கி சம்பாதித்து கொள்கிறோம் என்று கேட்டார்களாம்.
அப்போ இளங்கோவன் என்ன சொல்லி இருக்கணும்? ஐயா உணவக உரிமையாளர்களே நீங்க தரமான ருசியான உணவை சரியான விலையில் கொடுத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களை தேடி சென்று மக்கள் சாப்பிடுவது போல உங்கள் உணவகத்திலும் கூட்டமாக வந்து சாப்பிடுவார்கள். அதற்காக அந்த உணவகங்கள் கூட இலவசமாக கொடுக்கும் மக்களின் அத்தியாவசிய தேவையான கழிவறைக்கு கட்டணம் வாங்குவது அசிங்கம். அரசாங்கத்துக்கு அவமானம். அப்படி எல்லாம் டெண்டர் விதிகளை மாற்ற முடியாது என்று சொல்லி இருக்கணும்.
ஆனால் அவர் அப்படி சொல்லாமல் விதிகளை மாற்றி உணவக டெண்டரை கக்கூஸ் டெண்டராக மாற்றி விட்டார். மக்கள் சார்பாக அதிகாரிகளின் பணிகளை கண்காணிக்க வேண்டிய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்திற்கும் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதல்வருக்கும் அமைச்சருக்கும் மக்களின் இந்த கஷ்டம் காதில் விழும் வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications