Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேர்மைக்கு கொடுத்த பரிசா இது? 3 லட்சம் அபராதமா? பொங்கி எழுந்த என்கவுண்டர் வெள்ளத்துரை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறை அதிகாரிகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டுச் சுட வேண்டாம் என்று அரசாங்கம் கட்டளைப் போட்டால் எப்படி ரவுடிசம் குறையும் என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் டிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உள்துறையிலுள்ள ஒரு உயர் அதிகாரி மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் கசிந்தது.

CM Stalin Velladurai

இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆகவேதான் முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலாளர் செயல் மீது அதிருப்தி அடைந்ததாகவும், உடனடியாக சஸ்பெண்டை ரத்து செய்யச் சொன்னதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏடிஎஸ்பி வெள்ளத்துரை ஒரு யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளேன் என்பது பற்றி ஆவேசமாகப் பேசி இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை, "பலரும் என்னை என்கவுண்டர் வெள்ளத்துரை என்கிறார்கள். அப்படிச் சொல்வது அவர்களின் விருப்பமே தவிர, நான் அதை நினைத்து பெருமை கொள்வதில்லை.

சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். திட்டுபவர்கள் திட்டிக் கொண்டு போகட்டும் என்று விட்டுவிடுகிறேன். எவ்வளவு காலத்திற்கு இந்த அடைமொழி எல்லாம் நிற்கப் போகிறது. கொஞ்ச நாள் சொல்வார்கள், பின்பு மறந்து போய்விடுவார்கள். அதுதான் நடக்கும்.

நான் எனது பணிக்காலத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது மனநிறைவு ஏற்படுகிறது. உண்மையாக எனது கடமையைச் செய்திருக்கிறேன். என் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறேன். அந்தநிறைவுதான் முக்கியம். அது எனக்குப் போதும்" என்கிறார் இந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி.

"எனது முதல் என்கவுண்டர் திருச்சியில் பணியிலிருந்தபோது நடந்தது. பிச்சை முத்து கொக்கு ஜோம்ஸ் என இரண்டு ரவுடி கும்பல் இருந்தது. பிச்சை முத்துவின் உதவியாளர் கோசிஜின். அவன் நீதிமன்றத்தில் வைத்து ஒரு கொலை செய்தான். அவனைப் பிடித்து விசாரணை செய்தோம். நீதிமன்றத்தில் அவனை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் அழைத்து வரும் வழியில் ஒரு விபத்து. அதில் காவல்துறை வாகனத்திலிருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றான். அப்போது அவனை என்கவுண்டர் பண்ண வேண்டிய நிலை. செய்தோம்.

CM Stalin Velladurai

கால்வதுறையில் 97இல் சேர்ந்தேன். 98இல் முதல் என்கவுண்டர் நடந்தது. அடுத்து சென்னையில் நடந்த என்கவுண்டர். அசோக் நகரில்தான் நான் காவல்துறை பயிற்சி பெற்றேன். அரசு என்று ஒரு அதிகாரி இருந்தார். அவர்தான் எனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவர். நான் தனியாகத் துப்பாக்கி பயிற்சி என்று எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறை பயிற்சியின்போது எடுத்ததுதான். இயல்பாகவே எனக்குத் துப்பாக்கிச் சுட நன்றாக வரும்.

ரவுடிசம் எப்போது குறையும்? சரியான அதிகாரி இருந்தால் தானாகக் குறையும். அதிகாரி மேம்போக்காக இருந்தால் ரவுடிசம் அதிகரிக்கும். இப்போது துப்பாக்கி தருகிறார்கள். ஆனால் சுடக்கூடாது என்கிறார்கள். லத்தியைக் கொடுக்கிறார்கள். ஆனால் அடிக்கக்கூடாது என்கிறார்கள். எப்படி ரவுடிசம் குறையும்? இன்றைக்கு அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட நெருக்கடி. இதில் மனித உரிமை அமைப்புகள் வேறு? காவல்துறையாக என்ன செய்ய முடியும்?

ரவுடிசம் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள். வழக்கறிஞர் ஊதியம், அதற்கான செலவுகள். இப்படி இருந்தால் குற்றம் எப்படிக் குறையும்? உண்மையாக பணியைப் பார்த்த எனக்குக் கடைசியில் பணி ஓய்வு பெறும்போது 5 லட்ச ரூபாயைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். வாங்குகின்ற சம்பளத்தை நீதிமன்றத்திற்குக் கட்டிக் கொண்டிருந்தால், காவல்துறை அதிகாரிகள் எப்படி குடும்பம் நடத்த முடியும்?

ஒரு நேர்மை வேண்டாமா? செத்தவன் யார்? அடிப்பட்டவன் யார்? காவல்துறை யார் மீது நடவடிக்கை எடுத்தது? அதை ஆராய வேண்டாமா? செத்தவன் யார்? அவன் தியாகியா? மனித உரிமை என்றால், அது குற்றவாளிகள் பக்கம்தான் நிற்கிறது. ஒரு குற்றவாளியை அடிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அரசாங்கமே தள்ளுபடி ஊற்றி மூடிய ஒரு வழக்கில் எனக்கு அபராதம் போட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் லத்தி, துப்பாக்கியை காவல்துறை அதிகாரிகளுக்குத் தரவேண்டாம்? அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றால், எது அரசாங்கம் கொடுக்கிறது? பிடுங்கி வைத்துக் கொள்ளலாமே?

ஒரு எஸ்.ஐயை கொக்கி குமார் என்று ஒருவன் கொலை செய்கிறான். அதில் அவன் இறந்து போகிறான். அதில் நான் சப் டிவிஷன் ஆபீசர். அந்த வழக்கில் எனக்கு மனித உரிமை நீதிமன்றம் 3 லட்சம் அபராதம் போடுகிறார். அந்த வழக்கில் இறந்தவன் ரவுடி. ஏ3 அவன். அதை எடுத்துச் சொல்ல அரசுக்கு மனம் இல்லை. செத்தவன் யார் எனத் தெரியாமல் நீதிபதி அபாரம் போடுகிறார். மனித உரிமை ஆணையத்தில் இருக்கிறார். அவர் தனது விரும்பப்படி செய்கிறார். அதில் ஒரு நியாயம் வேண்டாமா?

அந்த வழக்கில் புகார் கொடுத்தவர் புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டார். சிபிசிஐடி வழக்கை மூடிவிட்டது. ஆனால், மனித உரிமை ஆணைய நீதிபதி அபராதம் போடுகிறார். இது என்ன நியாயம்? மனித உரிமை பேசுகிறவர்களை ஒரு நாள் போலீஸ் வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள்? போலீஸ் என்றால் வெளியே மரியாதை இருக்கிறது? ஆனால், உள்ளுக்குள் நாய் படாதபாடு படுகிறோம்.

எஸ்.ஐ ஆக இருந்த போது நான் 5 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். அன்றைக்கு 15 பவுன் 75 ஆயிரம் ரூபாய். இன்று 40 ஆயிரம் சம்பளம் தருகிறார்கள். அதை வைத்து ஒரு பவுன் நகை வாங்க முடியுமா? இன்று காவல்துறைக்கு வேலை வரும் இளைஞர்கள் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள். நாம் ஏன் குற்றவாளியை அடித்து வழக்கு சம்பாதிக்க வேண்டும் என விவரமாக இருக்கிறார்கள். எப்படிக் குற்றம் குறையும்?

ஆங்கிலேயர் ஆட்சியில் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்றால் ரவுடி பயப்படுவான். இன்றைக்கு ஜெயிலுக்குப் போக வேண்டும் என்றால் சந்தோஷமாகப் போகிறான். அவ்வளவு சலுகைகள் உள்ளே தருகிறார்கள். எப்படி குற்றவாளி பயப்படுவான்?" என்று பொங்கி எழுந்து பேசுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+