ஐ.டி ரெய்டுக்கு பின்னணி இதுதானாமே? காசா கிராண்ட் வெளியிட்ட ‘அந்த’ அறிவிப்பு.. மூக்கு வேர்த்திடுச்சோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் நிறுவனம் மீது வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுவதற்கு, அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பும், அடுத்தடுத்த புராஜெக்ட்கள் பற்றிய தகவல்களும் கசிந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.

காசா கிராண்ட் நிறுவனம்: சுமார் 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் இயங்கி வரும் காசா கிராண்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் தங்களது குடியிருப்புகளை நிறுவி இருக்கும் காசாகிராண்ட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மும்பை மற்றும் புனேவில் 20 மில்லியன் சதுர அடி ஆடம்பர மற்றும் மலிவு விலையில் வீடுகளை உருவாக்க ரூ.8,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில் தான், காசா கிராண்ட் நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை ரெய்டு தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீர் ஐ.டி ரெய்டு: நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், கோவையில் உள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. காசா கிராண்ட் நிறுவன அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளாக வளர்ந்து வந்த காசா கிராண்ட் நிறுவனத்தை ஒரே நாளில் அசைத்துப் பார்த்துள்ளது இந்த ஐ.டி ரெய்டு.

இந்நிலையில், இந்த ஐ.டி ரெய்டுக்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கட்டுமானத் துறைக்கும் பொறுப்பு வகிப்பதால், இந்த ரெய்டில் காசா கிராண்ட் நிறுவனமும் சிக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், காசா கிராண்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மூக்கு வியர்த்திருப்பதற்குக் காரணம் என்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் காலடி: இதுவரை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் ஹைதராபாத் முழுவதும் 38 எம்எஸ்எஃப் ரியல் எஸ்டேட்டை உருவாக்கியுள்ள காசாகிராண்ட் நிறுவனம் முதன்முறையாக தென்னிந்தியாவிற்கு வெளியே பயணம் செய்ய உள்ளது. மும்பை மற்றும் புனேவில் நாங்கள் குடியிருப்புகளை நிர்மாணிக்க உள்ளோம் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது காசா கிராண்ட் நிறுவனம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தேசிய பிராண்ட் தூதராகவும் காசாகிராண்ட் நிறுவனம் அறிவித்தது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் ஹைதராபாத்தில் 140 க்கும் மேற்பட்ட புராஜெக்ட்கள் மூலம் 40,000 வீடுகளையும் விற்பனை செய்யவுள்ளோம். 2023ஆம் நிதியாண்டில் ரூ.4,200 கோடியாக இருந்த எங்களது விற்பனை மதிப்பை 24ஆம் நிதியாண்டில் ரூ.7,200 கோடியாக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

ரெய்டு பின்னணி: இந்தச் சூழலில் தான் வருமான வரித்துறையின் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. காசா கிராண்ட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கால் வைத்து, தங்கள் நிறுவனத்தை விஸ்தாரம் செய்ய உள்ள அறிவிப்பு வெளியான சில வாரங்களிலேயே இந்த ரெய்டு நடந்திருப்பதால், அந்த அறிவிப்பு தான் இந்த ரெய்டுக்கு காரணமா என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணிபுரியும் சதீஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக காசா கிராண்ட் திட்டத்தின் அனைத்து விளம்பர ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை திருடி வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக, காசா கிராண்ட் நிறுவன புராஜெக்ட்கள் பற்றி லீக் ஆன தகவல் ஐ.டி அதிகாரிகளுக்கு கிடைத்தது இந்த ரெய்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+