விஜய் வேங்கைவயல் செல்வதாக வந்த தகவலால் அவசரமாக தாக்கல் செய்யப்படவில்லை குற்றப்பத்திரிகை.. உண்மை இதோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போவதாக தகவல் வெளியாகிய அடுத்த 2 நாளிலேயே, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற அவசரத்தில், தமிழக அரசு குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மை என்னவென்று பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதமாகிய நிலையில், குற்றவாளிகளை கண்டறிய வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல் இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்திருக்கிறார்.
இதனால் பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற தகவல் வெளியான பின்னரே, தமிழ்நாடு அரசு அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற தகவல் வெளியாவதற்கு முன்பாகவே, நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக வெளியான தகவல் ஜனவரி 21ஆம் தேதி தான். அதற்கு முன்பாக ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் சென்று புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்தித்தார்.
இதனால் விஜய்-ன் அடுத்த நகர்வு வேங்கைவயல் நோக்கி இருக்கும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் விஜய் பரந்தூர் மக்களை சந்தித்த ஜனவரி 20ஆம் தேதி வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் விஜய் வேங்கைவயல் செல்கிறார் என்ற அவசரத்தில், அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
-
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications