Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே அனல் பறக்கும் விவாதமாக இருந்து வந்தது, "தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் களமிறங்கப் போகிறார்?" என்பதுதான். பெரம்பூரா? வேளச்சேரியா? என கடந்த ஒரு மாத காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் 'பெரம்பூர்' தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

விஜய் பெரம்பூரில் நிற்பதால், அவரை வீழ்த்த பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக எத்தகைய அஸ்திரத்தை கையில் எடுக்கப் போகின்றன என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த வேளையில், சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி முடிவாக, பெரம்பூர் தொகுதியை அதிமுக தனது கூட்டணி கட்சியான பெரம்பூரில் எந்த கட்டமைப்பு இல்லாத பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த முடிவின் பின்னணியில் உள்ள மிகப்பெரிய அரசியல் சதிவலை தற்போது அம்பலமாகியுள்ளது.

TVK Vijay Perambur Constituency

'அதிமுகவை கண்டு அஞ்சியதா தவெக?

பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளரான 'பெரம்பூர் சேவியர்' தான் அதிமுக சார்பாக களமிறக்கப்படுவார் என தொண்டர்களாலும், தொகுதி மக்களாலும் உறுதியாக நம்பப்பட்டது. ஏனெனில் அவர், அந்த தொகுதி அதிமுகவில், கிறிஸ்தவ மக்களின் முகமாக விளங்கி வருகிறார். சிறுபான்மையினர் மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களிடம் நெருங்கிய தொடர்பிலும் இருந்து வருகிறார் சேவியர். எனவே சேவியர் களமிறங்கினால், அது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவும், படுதோல்வியை நோக்கிய பயணமாகவும் அமைந்திருக்கும். ஆனால், அதிமுக சேவியரின் இந்த பலம் தான் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி சில திரைமறைவு சதிகளால் பின்னப்பட்டு உள்ளது.

TVK Vijay Perambur Constituency

ஆதவ் அர்ஜுனாவின் திரைமறைவு நாடகம்!

விஜய்க்கு பெரம்பூரில் எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது, அவர் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, பலம் வாய்ந்த அதிமுக வேட்பாளரான சேவியரை தடுத்து நிறுத்தும் சதி அரங்கேறியுள்ளது. இதற்காக திரைமறைவில் காய் நகர்த்தியது ஆதவ் அர்ஜுனா &கோ என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. பெரம்பூரில் இருக்கும் சிறுபான்மையினர் கிறிஸ்தவ சமுதாய‌ மக்கள் மற்றும் பர்மா தமிழர் வாக்குகள் சுமார் 40,000 உள்ளன. கிறிஸ்தவரான சேவியர் வேட்பாளராக நிற்கும் பொழுது அது விஜய்க்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால், பாமகவின் மாம்பழ சின்னத்திற்கு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மக்கள் வாக்குகள் செல்லாது என்பதை உணர்ந்து அந்த வாக்குகளை விஜய் பக்கம் திருப்புவதற்கு அதிமுக போட்டியிட கூடாது என்ற நோக்கத்தில் அன்புமணி மூலமாக அதிமுக தலைமைக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து, இந்த தொகுதியை பாமகவுக்கு ஒதுக்க வைத்து விஜய்யின் வெற்றிப் பாதையை எளிதாக்கும் வேலையை அவர் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

TVK Vijay Perambur Constituency

இது முதல் முறையல்ல... 2021-ல் இதுபோன்று நடந்ததே.. அது வேறு!

ஆதவ் அர்ஜுனா இப்படி திரைமறைவில் ஒரு வேட்பாளருக்காக வேலை பார்ப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்கிய போது, அவருக்கு வெற்றி இலகுவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனக்குத் தெரிந்த அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, அங்கும் பாமக கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்கச் சொல்லி அதிமுகவில் இதேபோன்று திரைமறைவில் அழுத்தம் கொடுத்தார் ஆதவ். இதன் விளைவாகவே பாமக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் கசாலி என்ற முஸ்லிம் வேட்பாளர் களம் இறக்கப்பட்டதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். அந்தத் தேர்தலில் அவர் திமுகவுக்காக ஆதவ் அர்ஜுனா வேலை பார்த்தார் என்பதே அரசியல் அறிந்தவர்கள் கூறும் பகிரங்க குற்றச்சாட்டு.

TVK Vijay Perambur Constituency

அதிமுகவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

இந்த திரைமறைவு பின்னணியில் ஆதவ் அர்ஜுனாவும் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்சும் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இருவருமே, அடிப்படையில் தெலுங்கு சமுதாயத்தை சார்ந்தவர்கள். அந்த வகையில் ராஜேஷ் இதற்கு இசைந்து பெரம்பூர் தொகுதியை அதிமுகவிற்கு வாங்கும் வேகத்தை குறைத்துக் கொள்ள, ஆதவ் அர்ஜுனாவுடன் இணக்கமாக இருப்பது ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது..

தற்போதைய சூழலில், பெரம்பூரில் அதிமுக போட்டியிடாத காரணத்தால், மேடைக்கு மேடை தவெக தலைவர் விஜய் கூறி வருவது போலவே, "எங்களுக்கு போட்டி திமுக தான்" என்ற பிம்பம் பெரம்பூரில் உறுதியாகிவிட்டது. திமுக கடுமையான போட்டியை கொடுத்தால் மட்டுமே அவர்கள் வெல்ல வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், விஜய் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

TVK Vijay Perambur Constituency

பெரம்பூரில் திமுக - அதிமுக - தவெக மும்முனைப் போட்டியாக இருந்த நேரத்தில் தற்போது இருமுனை போட்டியாக உருவாகியுள்ளது. பாமக மூன்றாவது இடத்தை பிடிக்குமா அல்லது நாம் தமிழர் மூன்றாவது இடத்தை பிடிக்குமா என்ற கேள்வி உள்ளது.. பெரம்பூர் தொகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் பாமகவிற்கு ஒதுக்கியதால் மிகப்பெரிய சோர்வில் உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை. பெரம்பூரில் எந்த செல்வாக்கு இல்லாத பாமக நிற்பதால், மாபெரும் வாக்கு வங்கியை கொண்ட அதிமுக கூட்டணி நிர்கதியாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

விழித்துக்கொண்டதா அதிமுக மேலிடம்?

கூட்டணி தர்மம் என்ற பெயரில், வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியை, அதுவும் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளரை ஓரங்கட்டிவிட்டு தாரைவார்ப்பது தற்கொலைக்கு சமம். இந்த சதிவலை குறித்த தகவல் தற்போது அதிமுக மேலிடத்தின் கவனத்திற்கு கசிந்துள்ளதாகவும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தலைமை, உடனடியாக பெரம்பூர் தொகுதியை மீண்டும் அதிமுக வசமே கொண்டு வர தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

பெரம்பூர் அதிமுக சேவியர் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே, அது தவெக மற்றும் திமுகவிற்கு உண்மையான போட்டியாக இருக்கும். தொண்டர்களின் எதிர்பார்ப்பும் அதுவே! தொகுதி மாற்றம் நடக்குமா? இல்லை தாரைவார்ப்பது தொடருமா ? என்ற கேள்வி பெரம்பூர் அதிமுகவினரிடையே எதிரொலிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+