ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?
சென்னை: சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு காட்டியுள்ள விஜய்யின் போர்ட்ஃபோலியோவில் ஒரு விஷயம் மட்டும் நிதி ஆலோசகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவரின் முதலீடுகள் தவறாக இருப்பதாக சிலர் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. நேற்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது சொத்து விவரங்களைப் பட்டியலிட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும், அரசியல் வட்டாரத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

விஜயின் முதலீடு
சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு காட்டியுள்ள விஜய்யின் போர்ட்ஃபோலியோவில் ஒரு விஷயம் மட்டும் நிதி ஆலோசகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மொத்த சொத்தில் சுமார் 17 சதவீதத்தை, அதாவது 100 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கி நிலை வைப்புத் திட்டத்தில் (Fixed Deposit) வைத்துள்ளார் விஜய்.
வெளியே இருந்து பார்க்க இது 'மிகவும் பாதுகாப்பான' முடிவாகத் தெரிந்தாலும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் இது ஒரு 'இன்வெஸ்ட்மென்ட் பிளண்டர்' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஏன் இந்த 100 கோடி FD ஒரு சறுக்கல்?
வங்கி எஃப்டிகளில் சராசரியாக 6.5% வட்டி கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். 100 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் வட்டி வருமானம் வரும். ஆனால், இங்கேதான் 'பணவீக்கம்' (Inflation) எனும் வில்லன் நுழைகிறான். ஆண்டுக்கு 3% பணவீக்கத்தைக் கழித்துப்பார்த்தால், இந்த முதலீட்டின் நிஜமான லாபம் (Real Return) வெறும் 3.5% மட்டுமே.
இவ்வளவு பெரிய தொகையைக் கையில் வைத்துக்கொண்டு, வெறும் 3.5 சதவீத வளர்ச்சியைப் பெறுவது ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவா? விஜய் போன்ற ஒரு மாஸ் லீடருக்கு யார் இப்படி ஒரு 'பழமைவாத' ஆலோசனையை வழங்கியது எனத் தெரியவில்லை.
மாற்று வழி என்ன?
இந்த 100 கோடி ரூபாயை இன்னும் ஸ்மார்ட்டாகப் பிரித்து முதலீடு செய்திருக்கலாம்:
பேலன்ஸ்டு அப்ரோச்: 100 கோடியில் 50 கோடியை மட்டும் அரசுப் பத்திரங்கள் (Govt Bonds) அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (Debt Funds) போட்டிருக்கலாம். இது எஃப்டியை விட கூடுதல் பாதுகாப்பையும், வரிச் சலுகையையும் தந்திருக்கும்.
அதிக லாபம்: மீதமுள்ள 50 கோடியைச் சற்று 'ரிஸ்க்' எடுத்து நேரடி மியூச்சுவல் ஃபண்டுகளில் (Direct MF) முதலீடு செய்திருந்தால், நீண்ட கால அடிப்படையில் எஃப்டியை விட பல மடங்கு அதிக வருமானத்தைப் பார்த்திருக்க முடியும்.
ஆனால் விஜய் இதை எல்லாம் மிஸ் செய்துவிட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று FDல் போட்டு உள்ளார்.
நம்மூர் 'ஸ்மார்ட்' முதலீட்டாளராக இருந்தால்
உதாரணத்திற்கு, ஒரு தேடல் உள்ள முதலீட்டாளரிடம் இந்த 100 கோடி கிடைத்தால் என்ன செய்யலாம்? 50 கோடி ரூபாயை ஒரு 'ஹைப்ரிட் ஃபண்ட்' (Hybrid Fund) திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதில் SWP (Systematic Withdrawal Plan) வசதியை ஆக்டிவேட் செய்தால், மாதாமாதம் ஒரு நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். மீதமுள்ள தொகை சந்தையின் வளர்ச்சியோடு இணைந்து பெருகிக்கொண்டே இருக்கும். இதனால் வாழ்க்கையையும் நிம்மதியாக அனுபவிக்கலாம், பணமும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
-
தவெக ஆட்சி சிறப்பாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்! விஜய்யை சந்தித்த அன்புமணி பாராட்டு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications