சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரகசிய "ஹாட் டாக்".. திமுக எடுக்கும் "ரிஸ்க்".. அப்ப அவர் நிலைமை? அறிவாலயம் முழுக்க இதே பேச்சாமே

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்க போகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: அறிவாலயத்தில் முக்கியமான விஷயம் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.. இது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

10 வருடம் கழித்து திமுக ஆட்சியை எட்டிப்பிடித்தது.. அமைச்சர்கள் பதவியேற்று கொண்ட அன்றே, முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம், வார்னிங் ஒன்றை தந்தார்.

கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் வருகிறதோ, அது விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் இல்லாமல் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

 அறிவாலயம்

அறிவாலயம்

ஆனால், அடுத்த வாரமே சர்ச்சைகள் வெடித்தது.. அதுவும் சீனியர் அமைச்சர்கள் மீதே புகார்கள் அறிவாலயம் வந்து சேர்ந்தன.. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் என்ற செய்தி இந்த ஒரு வருட காலமாகவே அடிபட்டு வருகிறது.. ஆனால், ஸ்டாலினின் கரிசனம், கனிவு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குறிப்பிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. அமைச்சரவையும் மாற்றப்படவில்லை.

 தர்மசங்கடம்

தர்மசங்கடம்

எனினும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்பட்டதில் இருந்து, மீண்டும் இந்த விவகாரம் தலைதூக்கியது.. உதயநிதி அமைச்சராவார், துணை முதல்வர் ஆவார் என்று இருவேறு தகவல்கள் வட்டமடித்தன.. இதை செய்தியாளர்கள் உதயநிதியிடமே கேட்டனர்.. "நீங்கள் அமைச்சராக, அல்லது துணை முதல்வராக வரவேண்டும் என்று, உங்கள் அமைச்சர்களே விரும்புகிறார்களே.. இது முதல்வரின் கவனத்திற்கு சென்றதா? என்று கேட்டனர்.. அதற்கு உதயநிதி சிரித்து சமாளித்தாரே தவிர, கறார் பதிலை சொல்லவில்லை.

 உதயநிதிக்கு என்ன சிக்கல்?

உதயநிதிக்கு என்ன சிக்கல்?


கடந்த மே 7ம் தேதியன்று அமைச்சரவை மாற்றம் நடப்பதாக இருந்தது.. அதுவும் நடக்காமல் தள்ளி போய்க் கொண்டிருக்கிறது.. இதற்கு உதயநிதியைதான் காரணமாக சொன்னார்கள்.. உதயநிதியை அமைச்சர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே துர்கா ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்தாலும், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் இன்னும் பலமாக எழுந்துவிடுமே என்பதால் ஸ்டாலின் ரொம்பவே யோசிப்பதாகவும், அதனாலேயே அமைச்சரவை மாற்றம் தள்ளி போய் கொண்டிருபப்தாகவும் செய்திகள் கசிந்தன.

 துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின்

இப்போது இதுகுறித்து வேறு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. அமைச்சரவையை நிஜமாகவே மாற்றியமைக்க போகிறாராம் ஸ்டாலின். இந்த மாற்றம் இழுபறியாகவே இருப்பதற்கு காரணம், சீனியர் அமைச்சர்கள் சிலரின் இலாகாவை மாற்றியமைக்க ஸ்டாலின் திட்டமிடுவதுதானாம்.. குறிப்பாக, உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் சிலர் விரும்புகிறார்கள். அதுவும், ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக இது நடக்க வேண்டியும் என விரும்புகிறது. ஆனால், ஸ்டாலினோ, வெளிநாடு பயணம் முடிந்ததும் உதயநிதியை கேபினெட்டுக்கு அடாப்ட் பண்ணிக்கொள்ளலாம் என நினைக்கிறார்.

 இணைப்பு முடிவு

இணைப்பு முடிவு

இது ஒரு புறமிருக்க, உதயநிதியை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் அவருக்கு மிகப் பெரிய சுமையாக இல்லாத துறையின் அமைச்சராக்கி விட்டு, ஒரு வருடம் அனுபவம் பெற்றப்பிறகு பெரிய இலாகாவைத் தரலாம் என்பது ஸ்டாலினின் முடிவாம். ஆனால், ஊரக உள்ளாட்சியையும், நகர்ப்புற உள்ளாட்சியையும் இணைத்து உள்ளாட்சி துறை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் ஒரு தரப்பு வலியுறுத்துகிறது. இதை ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டாராம். ஆனால், வலியுறுத்தலும், வற்புறுத்தலும் தொடர்ந்தபடி இருக்கிறதாம்.

 நேரு சம்மதம்

நேரு சம்மதம்

இதனிடையே, நகர்ப்புற வளர்ச்சித்துறையை உதயநிதிக்கு தரவிருப்பதாகவும், அதனால் உங்களின் இலாகா மாற்றப்படும் எனவும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சர் நேருவிடம் சொல்லப்பட்டதாம்... இந்த முடிவை நேருவும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.. எப்படி பார்த்தாலும், "அமைச்சர் உதயநிதி" ரெடியாகி கொண்டிருக்கிறார் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
Is Udhayanidhi stalin given the key post and why did Cabinet reshuffle postpone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X