இது லிஸ்டுலேயே இல்லையே.. மோடியின் அதிரடி.. விரைவில் கேஸ் விலை குறைகிறது? எவ்வளவு தெரியுமா?
சென்னை: விரைவில் நாடு முழுக்க வீட்டு சிலிண்டர் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் நாடு முழுக்க வீட்டு சிலிண்டர் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டு வருகிறது.
சென்னை - எல்பிஜி விலை சர்வதேச சந்தை விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. சென்னை- இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 1,118.50 ஆக உள்ளது.
எல்பிஜி மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இதன் விலை 1,068.50 ரூபாயாக இருந்தது. மார்ச்சில் இதன் விலை ரூபாய் 50 உயர்ந்துள்ளது. அதன்பின் வீட்டு சிலிண்டர் உயரவில்லை. கடந்த மார்ச் மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.
19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.171.50 குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2193 ரூபாய் இருந்த வணிக சிலிண்டரின் விலையானது ரூ.2021.50 என விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுக்க வீட்டு சிலிண்டர் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வீட்டு சமையல் சமையல் சிலிண்டர் விலை பெரும்பாலும் ரூபாய் 150- 180 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
பெட்ரோல்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது.
ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது.
இந்த நிலையில்தான் மக்கள் நலன் கருதி இந்தியாவின் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களை பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவிற்கு பின் இந்த நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்ட நிலையில்தான் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
எவ்வளவு குறையும்? : அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 5 ரூபாயும் குறையும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்தியாவின் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களை பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications