திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு?
சென்னை: திமுக கூட்டணியில் எம்.பி.யாகியிருக்கும் விசிக தலைவர் திருமா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். காட்டுமன்னார் கோயில் தொகுதியில் களமிறங்குகிறார் திருமாவளவன்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 8 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது, தான் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திருமாவளவன் தற்போது எம்பியாக உள்ள நிலையில் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து இந்த தேர்தலில் 10 தொகுதிகள் வரை விசிக எதிர்பார்த்தது.
ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதி கிடைக்கவில்லை. மாறாக விசிகவிற்கு 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன்
இந்த முறை காட்டுமன்னார் கோயில் தொகுதியில் களமிறங்குகிறார் திருமாவளவன். இதனை நேற்று இரவு அவரே அறிவித்த நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சி.
இன்று காலையில், இது குறித்து அமைச்சர் வேலுவிடம் விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். வேலுவும் இதனை விசாரித்த போது, தேர்தல் முடிவுகளில் சிங்கிள் மெஜாரிட்டியாக திமுக ஜெயிக்கும். ஆனா, ஆட்சிக்கான பெரும்பான்மை கிடைக்காது.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்று நேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவரின் விளக்கம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அப்போது , கூட்டணி கட்சிகளின் ஆதரவு திமுகவுக்குத் தேவைப்படும். அப்படி ஒரு சூழல் வந்தால் விசிகவின் ஆதரவு திமுகவுக்கு முக்கியமானது. அப்போது, கூட்டணி ஆட்சி வரும். அதில் விசிகவிற்கான ஒதுக்கீட்டில் அமைச்சராகலாம் என திட்டமிட்டே எம். எல். ஏ. எலெக்சனில் போட்டியிடுகிறார் என தகவல் தரப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வருத்தம்
தொல். திருமாவளவன் அளித்த விளக்கத்தில், "மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இதனால்தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசியல் களம் இப்போது 'காட்டுமன்னார்கோவில்' பக்கமாகத் திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும்" என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எடுத்திருக்கும் முடிவு, வெறும் தொகுதி மாற்றம் மட்டுமல்ல; அது 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலுக்கான ஒரு மெகா 'ஸ்கெட்ச்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதனை ஸ்டாலினிடம் வேலு சொன்ன போது மிகவும் வருத்தப்பட்டுள்ளார் ஸ்டாலின்.
திமுகவுக்கு ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? என்று வேலுவிடம் கேள்வி எழுப்பியவர், அவர் போட்டியிடுவதால், தொங்கு சட்டமன்றம் தான் உருவாகும்னு ஒரு தோற்றம் ஏற்படுதே... இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். அவரிடம், இதை பத்தி கேளுங்கள் "என்றும் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.
திருமாவை தொடர்பு கொண்டு எ. வ. வேலு விசாரிக்க, "உள் கட்சி பிரச்னையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேறு எதுவும் இல்லை " என்று மழுப்பியுள்ளாராம் திருமா. இதற்கிடையே விசிகவிலுள்ள 4 எம்.எல்.ஏ.க்களில் எஸ். எஸ். பாலாஜி, பனையூர் பாபு, ஷானவாஸ் ஆகிய மூவருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications