விஜய்க்கு போன தகவல்.. அண்ணாமலை யாத்திரையில் ஆட்டம் போட்ட மக்கள் இயக்கத்தினர்.. அப்செட்? என்னாச்சு?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையில் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விஜய் ஆக்சன் எடுக்க வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனராம்.
நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். அண்ணாமலை பாதயாத்திரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ரசிகர்கள் அதிர்ச்சி?: இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் முன்னிலையில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர்.
அவர் ஊடகங்களில் பேசுகையில், விஜய்யும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி தான். இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அரசியல் ரீதியாக இருவரும் ஒரே மாதிரிதான். விஜய் மூத்தவர், அண்ணாமலை இளையவர். இருவரும் மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். இருவரும் மக்களுக்கு நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்க அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். நல்ல விஷயத்தை யார் செய்தால் என்ன?
இருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதான் சரி. அண்ணாமலை இதைத்தான் சொல்கிறார். விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறோம். அவரும் வந்துவிடுவார்., என்று கூறினார். அவரின் இந்த பேச்சு கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இணையத்தில் இந்த வீடியோக்கள் டிரெண்டானது. இதில் கொடிகளுடன், விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ஆக்சன் எடுப்பாரா?: இது தொடர்பாக விஜய் ஆக்சன் எடுக்க வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனராம். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கொடிகளுடன், விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் இடையே இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து இவர்கள் இப்படி பாதயாத்திரையில் கலந்து கொண்டது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் விஜய் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்., அரசியல் ரீதியாக வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க கூடாது. மீறி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதை மீறி வேறு கட்சி கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விஜய் சார்பாக அந்த குறிப்பிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications