"நைட்டில் லுங்கியோடு".. சீனியர் செய்த அரசியல்.. கடுப்பான "குடும்பம்".. ஜெ.வுக்கு பறந்த "ரகசிய" மெசேஜ்
: ஜெயக்குமாருக்கு முக்கிய போஸ்டிங் கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்த செய்தி ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இது எத்தகைய மாற்றத்தை அதிமுகவுக்குள் ஏற்படுத்த போகிறது என்பது எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
இந்த முறை மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா எம்பி போஸ்டிங் தராததற்கு காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்து, ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்ற பின்னணியில் ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கே அதிர்ச்சிதான்...

எடப்பாடி பழனிசாமி
அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து லுங்கியுடன் கைது செய்ததில் எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து போய் பார்த்தார்... காரணம், அதிமுகவின் குரலாய் மட்டுமல்ல, இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பவர் ஜெயக்குமார்தான்.. இவர் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற ஷாக்கில் இருந்து எடப்பாடியால் உண்மையிலேயே வெளிவர முடியாமல் போனது.. அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கையையும் காட்டமாக வெளியிட்டார்..

ஓபிஎஸ்
ஜெயலில் ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார்... அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார். அதற்கு காரணம் ஜெயக்குமார் மீதான எடப்பாடியின் நன்மதிப்புதான்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கவும் எடப்பாடி ஏற்கனவே ஒரு பிளான் வைத்திருந்தார்.. அதன்படிதான், அவருக்காக கட்சியின் முக்கிய பொறுப்பை தரலாம் என்று யோசித்துள்ளார்.. குறிப்பாக, அக்கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவில் உள்ளதாக தகவல்கள் பரபரத்தன..

தமிழ்மகன் உசேன்
இப்போதைக்கு தமிழ்மகன் உசேன் தற்காலிக தலைவராக உள்ளதால், அந்த பொறுப்பைதான் ஜெயக்குமாருக்கு வழங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்.. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தவர் ஜெயக்குமார்தான்.. சசிகலா என்றாலே, எடப்பாடியே அமைதியாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக சீறியவர் ஜெயக்குமார்தான்.. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக அரசையே சீண்டி ஜெயிலுக்கு போன சரித்திர வரலாற்று நிகழ்வையும் நடத்தி காட்டியவர்..

மதுசூதனன்
அதனாலேயே அத்தகைய உயரிய பதவி ஜெயக்குமாருக்கு காத்திருப்பதாக தெரிகிறது.. அன்று வடசென்னையில் மதுசூதனன் எப்படி கெத்து காட்டினாரோ, அதுபோலவே, ஜெயக்குமாரும் செயல்படுவார் என்று எடப்பாடி அதிகமாக நம்புகிறாராம். அதனால்தானோ என்னவோ, ராஜ்யசபாவுக்கு 2 வேட்பாளரை அறிவித்துவிட்டபிறகு, ஜெயக்குமார் இன்னும் அதிகமாக சீனில் வந்து போகிறார்.. வழக்கத்துக்கு மாறாக, கடந்த சில நாட்களாகவே, சசிகலாவை சீண்டி கொண்டிருக்கிறார்..

பாஜகவில் இணையலாம்
"பாஜகவில் கூட சசிகலா இணையலாம் என்று கிண்டலடித்து, கூட்டணியில் உள்ள பாஜகவையும் வெறுப்பேற்றி உள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பதவி கிடைக்க போகிறது என்ற குஷியில் இப்படியெல்லாம் ஜெயக்குமார் பேசிவந்தாலும், அத்தனையும் சசிகலாவின் பார்வைக்கு சென்று கொண்டிருக்கிறதாம். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று இவர் பேட்டி தந்தது முதல், இப்போதைய சமீபத்திய பேட்டிகள் வரை அத்தனையும் சசிகலா டேபிளில் குவிந்துள்ளதாம்..

ரகசிய மூவ்கள்
இதனால் சசிகலா குடும்பம் அவர் மீது ஏகத்துக்கும் கடும் கோபத்தில் இருக்கிறதாம்... தினகரன் இப்போதைக்கு சசிகலாவிடம் இருந்து விலகல் போக்கை கடைப்பிடித்தாலும், தற்போதைய சூழலில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், நடராஜனின் சகோதரர்கள் பழனிவேலு, ராமச்சந்திரன் ஆகியோர் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இதில் திவாகரன், சில பல "மூவ்" களை ரகசியமாக செய்து வருகிறார்.

சோர்ஸ்கள்
இந்த நிலையில், ஜெயக்குமாரின் சசிகலாவுக்கு எதிரான பேச்சு அவரை ரொம்பவே கோபப்பட வைத்துள்ளதாம். இந்த நிலையில், அதிமுகவில் உள்ள சில சோர்ஸ்கள் மூலம் தனது கோபத்தை ஜெயக்குமாருக்கு பாஸ் பண்ணியுள்ளாராம் திவாகரன்.. அப்படியானால், இதற்கு கட்டுப்பட்டு ஜெயக்குமார் இனி சசிகலா விஷயத்தை அடக்கி வாசிப்பாரா? என்று தெரியவில்லை.. அப்படி அடக்கி வாசிக்க நேர்ந்தால், எடப்பாடி பழனிசாமி அதை எப்படி எடுத்து கொள்வார்? முக்கியமாக அந்த போஸ்டிங் பற்றி என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications