"சிங்கார சென்னை.." தனியார் வசம் செல்லும் மேஜர் வேலை! வேகமெடுக்கும் மாற்றம்! உண்மையில் களநிலவரம் என்ன
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது கழிவு மேலாண்மையைத் தனியார் நிறுவனங்கள் செய்து வரும் நிலையில், இதனால் யாருக்குப் பலன், யாருக்குப் பிரச்சினை என்பது குறித்துப் பார்க்கலாம்.
சென்னையில் இதற்கு முன்பு வரை அனைத்து இடங்களிலும் கழிவு மேலாண்மை என்பது மாநகராட்சி ஊழியர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களே நகரில் கழிவு மேலாண்மை பணியைச் செய்து வந்தனர்.

இருப்பினும், கழிவு மேலாண்மையில் பல புகார்களைப் பொதுமக்கள் முன்வைத்தனர். சாலைகளில் இருக்கும் குப்பைகள் தொடங்கி லாரியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் போது அவை அப்படியே பறப்பது வரை பல குற்றச்சாட்டுகளைச் சென்னைவாசிகள் முன்வைத்தனர்
கழிவு மேலாண்மை: இதற்கிடையே சென்னையில் சில காலத்திற்கு முன்பு கழிவு மேலாண்மையைத் தனியாருக்கு விடப்பட்டது. முதற்கட்டமாக 10 மண்டலங்களில் கழிவு மேலாண்மையைத் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் மீதமுள்ள ஐந்து மண்டலங்களிலும் கழிவு மேலாண்மையைத் தனியாரிடம் ஒப்படைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது எந்தளவுக்குப் பலன் கொடுத்துள்ளது என்பதை பார்க்கலாம்
இப்போது சென்னையில் தொண்டியார்பேட்டை, அண்ணாநகர், ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களைத் தவிர அனைத்து மண்டலங்களிலும் கழிவு மேலாண்மை தனியாருக்கு விடப்பட்டுள்ளது. வட சென்னையில் ராம்கி என்விரோ நிறுவனமும், தெற்கு சென்னையில் ஊர்பேசர் சுமீத் நிறுவனமும் இந்த பணிகளைக் கவனித்து வருகிறது.

பெரிய மாற்றம் இல்லை: திருவொற்றியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கழிவு மேலாண்மை தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. இது குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "கார்ப்பரேசன் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் குப்பைகளை கலேக்ட் செய்வதில் பிரச்சினை இருக்கும். இதனால் குப்பை தேங்கிவிடும். ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆள் வரவில்லை என்றாலும் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறார்கள். இதனால் கலெக்ஷன் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கிறது" என்றார்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாகத் தூய்மையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், சென்னை மாநகராட்சியிடம் புகார்களைப் பதிவு செய்வது எளிதாக இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
புலம்பும் ஊழியர்கள்: இந்த பணிகளைக் கவனிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், "லீவ் எடுப்பதில் பிரச்சினை இருக்கிறது. வார விடுப்பைத் தாண்டி அவசரத்திற்கு லீவ் கேட்டால், கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்தால், ஈஸியான வேலையைத் தருகிறார்கள். மேலும், டார்கெட்கள் எட்ட முடியாத அளவுக்கு இருக்கிறது.
எதாவது மோதல் ஏற்பட்டால், எங்களை கார்னர் செய்துவிடுகிறார்கள். அதிகமாக வேலை வாங்குகிறார்கள்.. சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்த போது இதுபோன்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டதே இல்லை" என்றார். எட்டவே முடியாத டார்கெட்களை அதிகாரிகள் கொடுப்பதாகவும் இதனால் ஏற்கனவே பலரும் வேலையில் இருந்து நின்றுவிட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பேட்டரி வாகன ஓட்டுநர்கள் 450 வீடுகளில் இருந்து கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் 120-150 கிலோ மக்கும் குப்பைகளையும், 15-20 கிலோ மக்காத குப்பைகளையும் சேகரிக்க வேண்டும். அதேபோல சாலையோரம் துப்புரவு பணியாளர்கள் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். இந்த இலக்குகள் நிச்சயம் ஒவ்வொரு நாளும் அடைய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!












Click it and Unblock the Notifications