யோகேந்திர யாதவ் சொன்ன மாதிரியே நடக்குதே.. அப்போ இதுதான் ரிசல்ட்டா? பாஜகவிற்கு கடும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி உள்ளது. முக்கியமாக பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

543 தொகுதிகளில் தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் இந்தியா கூட்டணிக்கு 212 இடங்கள் முன்னிலை கிடைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனியாக 92 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 284 இடங்கள் முன்னிலை கிடைத்துள்ளது. பாஜகவிற்கு தனியாக 238 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

மெஜாரிட்டி: நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜகவிற்கு காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்து வருகிறது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி உள்ளது. முக்கியமாக பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

யோகேந்திர யாதவ் கணிப்பு: முன்னதாக தேர்தல் வியூக வல்லுநரான யோகேந்திர யாதவ் வெளியிட்ட கணிப்பில், பாஜவுக்கு 240 முதல் 260 இடங்கள்தான் கிடைக்கும்- அதாவது பாஜகவுக்கு தனித்துப் பெரும்பான்மை கிடைக்காது என்றார். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் 35 முதல் 45 இடங்களைக் கைப்பற்றும்.

இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 முதல் 305 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்றார் யோகேந்திர யாவத். மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவை 272 இடங்கள். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெல்லும் சாத்தியம் இருக்கிறது.

ஒருவேளை கடைசி இரண்டு கட்டத்தில் பாஜக சோபிக்கவில்லை என்றால், தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும். பாஜக தனியாக மெஜாரிட்டி பெற வாய்ப்பு இல்லை. முக்கியமாக தேர்தல் இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டணி 250 இடங்களை தாண்டி பெற வாய்ப்புகள் உள்ளன.

பாஜக தனித்து மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே உள்ளன. இதனால் தொங்கு நாடாளுமன்றம் வர கூட உள்ளது. சிலர் சர்வே ரீதியாக பொய்களை சொல்கின்றனர்., என்று அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கணித்தது போலவே தேர்தல் முடிவுகள் வருகிறதோ என்று தோன்றுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி உள்ளது. முக்கியமாக பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு குறைவு என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+