இஸ்ரேல் ஈரானை அடிச்சா..இந்தியாவுக்கு வலிக்கும்! சாப்பாட்டுக்கே அல்லாடப் போகும் 25 லட்சம் இந்தியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இந்த மோதலின் தாக்கம் காரணமாக இந்தியாவில் 25 லட்சம் பேர் வரை வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கடந்த சில வாரங்களில் மேற்காசிய பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த தகவல்களின் பின்னர், அந்த பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Israel Iran War

இதற்கு பதிலடியாக ஈரானும் பல்வேறு அமெரிக்கா ஆதரவு நாடுகளின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஈரான் போர்

இந்த போர் பதற்றத்தின் நேரடி தாக்கத்தால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ளது. மேற்காசிய பகுதிகள் உலகளவில் முக்கியமான எண்ணெய் உற்பத்தி மையங்களாக இருப்பதால், அங்கு ஏற்படும் மோதல்கள் உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை

இதற்கிடையே காரணமாக இந்தியாவில் 25 லட்சம் பேர் வரை வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 'மத்திய கிழக்கில் போர் பதற்றம்: ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய மனித மேம்பாட்டில் தாக்கம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த மோதலால் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் திறன் குறையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வறுமை நிலை

இந்த அறிக்கையின் கணிப்பின்படி, உலகளவில் சுமார் 88 லட்சம் பேர் வரை வறுமை நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 4 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சீனா நாட்டிலும் பல லட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா

மேலும், இந்தியா தனது எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதியில் நம்பி இருப்பது இந்த அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதில் சுமார் 40 சதவீதம் மேற்காசிய நாடுகளிலிருந்து வருகிறது. அதேபோல், சமையல் எரிவாயு தேவைகளில் பெரும்பகுதியும் மேற்காசிய நாடுகளை சார்ந்தே உள்ளது.

வேலையின்மை

இந்த நிலை தொடர்ந்தால், இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா, உணவுப் பதப்படுத்துதல், எஃகு உற்பத்தி போன்ற பல தொழில் துறைகளும் பாதிக்கப்படலாம். இதனால் வேலைவாய்ப்புகள் குறைந்து, வேலையின்மை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் பதற்றம்

மேற்காசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் உலகளாவிய பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெற வேண்டியது அவசியம் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+