விண்வெளி துறையில் புதிய சாதனை! இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. கவுண்டவுன் தொடங்கியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா தனது 100வது ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியுள்ளது. இதன் மூலம் விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய சாதனையை படைக்க இருக்கிறது.-

சந்திரயான், மங்கள்யான் மற்றும் அதித்யா எல்-1 போன்ற விண்வெளி திட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியாவை உயர்த்திய இஸ்ரோ, நாளை தனது 100வது ராக்கெட்டை ஏவுகிறது. GSLV F15 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ராக்கெட், NVS-02 எனும் பெயரில் 2 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இந்த செயற்கைக்கோளின் நோக்கம் நேவிகேஷனை துல்லியமாக கொடுப்பதுதான். இந்தியாவை விட்டு 1500 கி.மீ தொலைவில் நீங்கள் இருந்தால் கூட, எங்கு இருக்கிறீர்கள் என்பதை இந்த செயற்கைக்கோள் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லிவிடும்.

isro space

ஏற்கெனவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி NVS-01 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு ஏவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+