சந்திரயான் 4 மிஷன்! பிளானே வேற.. மிரளும் மேற்கு நாடுகள்! முக்கிய அப்டேட் கொடுத்தது இஸ்ரோ
சென்னை: சந்திரயான்-4 திட்டத்திற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தில் நிலவின் மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும்.
சந்திரயான் 3 வெற்றி: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த முனைப்புக்காட்டி வருகிறது.

சந்திரயான்-4: இந்த திட்டத்தின் நோக்கம் நிலவிலிருந்து மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வருவதுதான். இதற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது எல்விஎம் 3 ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் இதற்கான கருவிகளை சுமந்துக்கொண்டு வெவ்வேறு நாட்களில் விண்ணுக்கு பாயும். இந்த மிஷனை 2028ம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
4வது நாடு: இந்த மிஷன் வெற்றி பெற்றால், நிலவிலிருந்து மண் மாதிரிகளை பூமிக்கு வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்த்த 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும். பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் 2-3 பகுதிகளை கொண்டிருக்கும். ஆனால், சந்திரயான் 4 மிஷனுக்காக ஏவப்படும் ராக்கெட்டுகள் 5 விண்கல தொகுதிகளை கொண்டிருக்கும் என்று, இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் கூறியுள்ளார்.
ஏன் ஆய்வு முக்கியம்?: இனி வரும் காலங்களில் வெவ்வேறு கிரகங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமடையும். குறிப்பாக செவ்வாய் குறித்த ஆய்வுகள் அதிகமாக இருக்கும். இதற்கு முன்னதாக நிலவில் விண்வெளி மையம் அமைக்க மேற்கு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அதாவது, பூமியிலிருந்து செவ்வாய்க்கு போவதை காட்டிலும், நிலவிலிருந்து செவ்வாய்க்கு போவது கொஞ்சம் ஈஸி. இதற்காகதான் நிலவில் விண்வெளி மையத்தை மேற்கு நாடுகள் கட்டமைக்க முயன்று வருகின்றன.
வெளி கிரகம் குறித்த கூட்டு ஆய்வில் மேற்கு நாடுகளுடன் நாம் பங்கெடுக்க விரும்பினால், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த தயாரிப்பு பணியின் ஒரு பகுதியாகத்தான் சந்திரயான்-4 மிஷன் இருக்கிறது.
நிலவின் மேற்பரப்பில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை தற்போது இரு நாடுகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications