ISRO: ககன்யான் திட்டத்தின் முக்கியமான சோதனை.. பாராசூட் டெஸ்ட்! வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ.. செம
ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும் வகையில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இதன்படி ககன்யான் திட்டத்தின் முக்கிய சோதனையான பாராசூட் சோதனை இன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
விண்வெளிக்கு சென்றுவிட்டு விண்கலம் பூமிக்கு திரும்பும் நேரத்தில், விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும் பாராசூட்களின் தகுதி, உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிடும் நோக்கத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

ககன்யான் திட்டம்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம்தான் ககன்யான். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி, இந்திய விமானப்படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ககன்யான் திட்டத்திற்காக பல்வேறு சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் முக்கியமான சோதனையை நடத்தியது. இது ககன்யான் திட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
பாராசூட் சோதனை
இந்த பாராசூட் சோதனை எதற்காக என்ற கேள்வி எழலாம். அதாவது, ககன்யான் திட்டத்தின் படி, விண்வெளிக்கு சென்றுவிட்டு விண்கலம் பூமிக்கு திரும்பும் நேரத்தில், விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும் பாராசூட்களின் தகுதி, உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மதிப்பிடும் நோக்கத்தில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப
ககன்யான் திட்டப்படி, இந்தியா தனது சொந்த விண்கலத்தைப் பயன்படுத்தி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தியா இந்த சாதனையை மேற்கொள்ளும் பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
ககன்யான் திட்டப்படி, 2025-2026-ல் ஆளில்லா சோதனை பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. விண்வெளிக்கு முதல் மனிதப் பயணம் 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியா விண்வெளி ஆய்வில் தன்னிறைவை எட்டும்.
வேகக் குறைப்பு அமைப்பு
விண்வெளியில் இருந்து மீண்டும் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் வரும். இதனை பாதுகாப்பாக அதன் வேகத்தை குறைத்து தரையிறக்குவதில் பாராசூட் முக்கிய பங்காற்றுகிறது. எனவேதான், ககன்யான் விண்கலத்தின் வேகக் குறைப்பு அமைப்பில் 4 வகையான 10 பாராசூட்கள் உள்ளன.
இந்த திட்டத்தின்படி, விண்ணில் இருந்து பூமிக்குள் விண்கலம் நுழைந்ததும் 2 பாராசூட்கள் விரியும். அதன்பிறகு 2 ட்ராக் பாராசூட்கள் விரிக்கப்படும். இதையடுத்து வேகம் படிப்படியாக குறைக்கும் நிகழ்வு தொடங்கும். அதன்பிறகு மூன்று பைலட் பாராசூட்கள் மற்றும் 3 பிரதான பாராசூட்கள் அடுத்தடுத்து திறக்கப்படும். இது விண்கலத்தின் வேகத்தை குறைக்க உதவும். இந்த ட்ராக் பாராசூட்கள்தான் பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications