வெற்றி மேல் வெற்றி..3வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட ஆதித்யா எல்1 வட்டப்பாதை.. இஸ்ரோ செம!
சென்னை: ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த வாரம் 2வது சுற்றுபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் இன்று , ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தற்போது 282*40225 கிமீ சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்-1 சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ அறிவிப்பு: சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும்.
எங்கே இருக்கும்?: இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.
எப்படி செல்லும்?: நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 கருவிகள் இதில் சுமந்து செல்லப்பட உள்ளன. மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல அமைப்புகளை பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் விண்கலம் ஏழு பேலோடுகளை எடுத்துச் செல்கிறது.
நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதேபோல் ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தில் இருக்கும் liquid apogee motor (LAM) என்பதுதான் இதை விண்ணுக்கு சுமந்து செல்லும். அதாவது புவி வட்டப்பாதையில் பிஎஸ்எல்வி ஆதித்யாவை நிறுத்திய பின் அது பூமியை சுற்றி சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக வட்டப்பாதையை அதிகரிக்கும். இதில் வட்டப்பாதையை அதிகரிக்க liquid apogee motor (LAM) பயன்படுத்தப்படும்.
அப்படியே வட்டப்பாதையை அதிகரித்து எல் 1 பாயிண்ட் அருகே ஆதித்யா எல் 1 செல்லும். அங்கிருந்து மேலும் சில வட்டங்களை அடித்து liquid apogee motor (LAM) எல் 1 பாயிண்டில் சுற்ற தொடங்கும். இதற்கு பெரும்பாலும் 127 நாட்கள் ஆகும். அந்த வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது சுற்றுபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது .ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications