Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரி மேப் விஜய்க்கு ரெடி.. ஐடி ஊழியர்கள் பிளஸ் பாயிண்ட்? வளர்மதியால் எடப்பாடிக்கு தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உருவெடுத்துள்ளது.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் நட்சத்திர தொகுதியாகவும் இது மாறக்கூடும் என்பதற்கான அறிகுறி இப்போதே தென்பட துவங்கிவிட்டது.. இதன் பின்னணி என்ன தெரியுமா? வேளச்சேரி ஸ்டார் அந்தஸ்துக்குள் வருவதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை, படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகர்ப்புறத் தொகுதியாக விளங்குகிறது.

Chennai Velachery

இந்த தொகுதியில் 55% முதல் 60% வரை வாக்குகள் வழக்கமாக பதிவாகும்.. இங்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இல்லாமல் பல்வேறு தரப்பு மக்களும் பரவலாக காணப்படுகின்றனர்.

திராவிட கட்சிகள்

வேளச்சேரி தொகுதியின் வாக்காளர் கட்டமைப்பு மிகவும் தனித்துவமானது. கடந்த கால தேர்தல்களை பார்க்கும்போது இங்கு திமுக, அதிமுக என்ற 2 திராவிடக் கட்சிகளுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.. இருந்தாலும் சமீப காலமாக திமுக கூட்டணியே இங்கு வலுவான நிலையில் உள்ளது.

இந்த தொகுதியில் பிராமணர்கள், தலித் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் பலதரப்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும், வேட்பாளரின் தனிப்பட்ட தகுதியும் அடிப்படை வசதிகள் குறித்த வாக்குறுதிகளுமே வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

வேளச்சேரி தொகுதி யாருக்கு

நகர்ப்புற தொகுதியான இங்கு இளம் வாக்காளர்கள் மற்றும் ஐடி துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களின் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான், முன்னணி அரசியல் கட்சிகளின் கவனம் வேளச்சேரியில் குவிய துவங்கிவிட்டது..

இதில் அதிமுகவை எடுத்து கொண்டால், கடந்த 2021 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அதேசமயம், தமிழக அரசியலில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய்யின் "தமிழக வெற்றி கழகம்" வேளச்சேரியை தனது கோட்டையாக்க திட்டமிட்டு வருகிறதாம்..

விஜய் கோட்டை "வி "சென்டிமென்ட்

குறிப்பாக இங்கு அதிகளவில் வசிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் எந்தவொரு பாரம்பரிய அரசியல் பிணைப்புக்கும் உட்படாதவர்கள்.. இந்த "மாறுபட்ட" வாக்காளர்களையே தவெக குறி வைத்துள்ளது.. இவர்களை நம்பியே நடிகர் விஜய் வேளச்சேரியைத் தேர்வு செய்ய ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அன்று விஜயகாந்த் தன்னுடைய முதல் தேர்தலில் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றதைப் போல, "வி" சென்டிமென்ட் அடிப்படையில் வேளச்சேரியை விஜய் குறி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, பனையூர் வீட்டுக்கு பக்கத்திலேயே வேளச்சேரி இருப்பதால் எளிதாக பிரச்சாரத்திற்கு எளிதாக இருக்கும் என்பதும் விஜய்க்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுவதாக தெரிகிறது..

அதிமுக எடப்பாடி பழனிசாமி

ஆனால், அதிமுகவின் கோட்டைக்குள் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள், வேளச்சேரியில் ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.

காரணம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, வேளச்சேரியில் போட்டியிடவே ஆசைப்படுவதாக தெரிகிறது.. தன்னுடைய நீண்டகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் பாதுகாப்பான தொகுதியாக வேளச்சேரியை கருதுகிறார்.

ஆனால், கடந்த தேர்தலில் அங்கு போட்டியிட்டுத் தோல்வியடைந்த எம்.கே.அசோக், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பது கட்சி தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது...

வளர்மதியின் பிடிவாதம்

எனவே, வளர்மதியை ஆயிரம் விளக்கு அல்லது அண்ணாநகர் தொகுதியில் நிறுத்துமாறு தலைமை சொன்னதாம்.. ஆனால் வளர்மதி அதனை ஏற்கவில்லையாம்.. இந்த முறை எப்படியாவது வேளச்சேரி அல்லது மயிலாப்பூரில் தனக்கு சீட் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.. இது மேலிட அதிமுகவுக்கு கடுப்பை தந்து வருவதாக தெரிகிறது..

அதேபோல இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தாலும், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் இது பாஜகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன. அப்படி மட்டும் நடந்தால், திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் மற்றும் விஜய்யின் புதிய கட்சி என ஒரு மும்முனை போட்டி இங்கு அரங்கேறலாம்..

வேளச்சேரி - ஸ்டார் தொகுதி

ஆனால் யார் களத்தில் குதித்தாலும்சரி, வேளச்சேரியின் பிரச்சனைகளையும் ஆராய வேண்டி உள்ளது.. காரணம், வேளச்சேரியில் உட்கட்டமைப்பு பிரச்சனைகள், மழைக்கால வெள்ள பாதிப்புகள் போன்றவை மக்களின் முதன்மைப் புகாராக இருந்து வருகின்றன.

மாற்றத்தை விரும்பும் இளைய சமுதாயம் விஜய்யின் பக்கம் சாயுமா அல்லது அனுபவம் வாய்ந்த வளர்மதி போன்றோருக்கு வாக்களிக்குமா என்பது பெரும் கேள்விக்குறிதான்.. ஆனால், நட்சத்திர வேட்பாளர்களின் வருகையும், உட்கட்சி போட்டிகளும் வேளச்சேரியை பரபரப்பாக்கி வருகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+