இந்த கொரோனா வகை மிக வேகமாக பரவக்கூடியது.. வலிமை வாய்ந்தது.. ஆனால்.. எய்ம்ஸ் எக்ஸ்பர்ட் எச்சரிக்கை
சென்னை: இந்தியாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் வகை குறித்து AIIMS முன்னாள் இயக்குநரும் மூத்த நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுக்க கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் தற்போது 2,324 கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் உள்ளனர். இது நாட்டிலேயே அதிக விகிதமாகும். தினசரி 700 முதல் 1,000 கோவிட் சோதனைகள் நடத்தப்படுவதால், இந்தியாவிலேயே அதிக சோதனை விகிதத்தையும் கேரளா மாநிலம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை கொரோனா: இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இரண்டு கோவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டம் பானூரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதிலும் அங்கே கோவிட்-19 வேரியண்ட் JN கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையன்று வேரியண்ட் JN வகை வைரஸ் மூலம் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 79 வயதான பெண்ணுக்கு இன்ஃப்ளூயன்ஸா லைக் நோயின் (ஐஎல்ஐ) லேசான அறிகுறிகள் இருந்தன, பின்னர் அவரிடம் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது.. அது கொரோனாவின் கிளை வகையான ஜேஎன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.;
நேற்று பாதிப்பு: நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 752 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 7 மாதங்களில் இந்தியாவில் பதிவான அதிகபட்ச கொரோனா கேஸ்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த மே 21ஆம் தேதி தான் அதிகபட்சமாக இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் சனிக்கிழமையன்று 104 புதிய கோவிட் கேஸ்கள் பதிவாகியுள்ளன,. இதன் மூலம் கர்நாடகாவில் ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்து உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் சோதனை பாசிட்டிவ் விகிதம் 5.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் இந்தியாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் வகை குறித்து AIIMS முன்னாள் இயக்குநரும் மூத்த நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், இது மிகவும் வேகமாக பரவக்கூடியது, மிக மிக வேகமாக பரவுகிறது, இது படிப்படியாக வலிமை வாய்ந்த, அதிகம் பரவிய வேரியண்ட் கொரோனாவாக மாறுகிறது....இது அதிக தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது, ஆனால் இதனால் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படுவது இல்லை.
வேகமாக பரவினாலும் தீவிர கேஸ்களை ஏற்படுத்துவது இல்லை. மக்கள் பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான அறிகுறிகள் அதிகமாக உள்ளன. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண், மூக்கு மற்றும் உடல் வலிகள் போன்ற மேல் சுவாசக் குழாய்கள் என்று கோவிட்-19 புதிய மாறுபாடு Jn.1 வகையின் அறிகுறிகள் உள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் AIIMS முன்னாள் இயக்குநரும் மூத்த நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications