ஸ்டாலின் இல்லாதப்ப.. மாஸ்டர் கீ இருப்பதே "இவர்" கையில்தான்.. இந்த போட்டோவை பார்த்தாலே புரியும்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
வேலூரிலிருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார். புதன் கிழமை வரை சிங்கப்பூரில் இருக்கும் அவர், வியாழக்கிழமை சென்னை திரும்புகிறார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக துரைமுருகன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது.
ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைப்பு குழு: இதற்கிடையே, திமுகவின் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைத்தது போல, அமெரிக்காவில் தான் தங்கியிருக்கும் நாட்களில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என ஸ்டாலின் சொல்லியிருந்தாராம்.

குறிப்பாக துரை தலைமையில் உததநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் கொண்ட மூவர் குழு அமைக்கப்படும் என சொல்லப்பட்டதாம். ஆனால், எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு, அதைத் தொடர்ந்து துரைமுருகனின் பதிலடி என சர்ச்சைகள் வெடித்ததால் துரை மீது கோபமாக இருந்தார் ஸ்டாலின். அதனால் நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது பற்றி யோசிக்கவில்லை.
குழு அமைக்கவில்லை: ஆனால், அமெரிக்காவுக்கு புறம்படும் முன்பு, தலைமைச் செயலாளரிடம், 'உதயநிதியிடம் கலந்து பேசி நீங்க முடுவெடுங்க. சிக்கலான பிரச்சனையில் என்னை கலந்து பேசாமல் முடிவெடுக்கக் கூடாது' என அட்வைஸ் செய்து விட்டுச் சென்றார் ஸ்டாலின். துரை தலைமையில் குழு அமைப்பதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இருந்திருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தான் அதனை தடுத்து விட்டனர். இந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழு குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலினிடம் துரைமுருகன் பேசியதாகவும், அதற்கு ஸ்டாலின், 'சி.எஸ். பார்த்துக்குவார் அண்ணே ! ' என்று ஒற்றை வரியில் சொன்னதாகவும், அந்த கோபத்தில்தான், நாமும் வெளிநாடு போவோம் என முடிவு செய்து பறந்து விட்டார் என்றும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
உதயநிதி ஸ்டாலின்: இப்படிப்பட்ட நிலையில்தான், உதயநிதி ஸ்டாலின் தலைமை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. திமுகவின் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், 2026-லும் கழக ஆட்சியை அமைத்திட கழகத்தலைவர் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இந்தக்குழுவின் சார்பில் தொடர்ச்சியாக, கழகத்தின் சார்பு அணிகளுடையப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், கழகத் தொழிலாளர் அணி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்க வளாகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
உதயநிதி மையம்: தொழிலாளர் நலனுக்காக கழக அரசு இந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தியிருக்கிற திட்டங்களை இன்னும் வேகமாக தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதிகபடியான தொழிலாளர்களை கழகத்தின் ஆதரவாளர்களாக உருவாக்கிட களப்பணியாற்ற வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளைக் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கூறினோம்.
கழகத் தொழிலாளர் அணியின் சார்பிலும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். அவற்றை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கழகத் தலைவர் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோமென உறுதியளித்தோம், என்று கூறினார். இந்த கூட்டத்தை முன்னின்றி நடத்தியது உதயநிதி ஸ்டாலின்தான். உதயநிதிதான் மையத்தில் அமர்ந்து இருந்தார். கூட்டத்தில் கேள்விகளை கேட்டதும் உதயநிதி ஸ்டாலின்தான். இதன் மூலம் அதிகார மையம் தான்தான் என்பதை நேற்று உதயநிதி ஸ்டாலின் நிரூபித்துள்ளார். ஸ்டாலின் இல்லாத நேரத்தில்.. துரைமுருகனும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் உதயநிதிதான் நிர்வாகத்தை வழி நடத்தி வருகிறார் என்பது நேற்றைய மீட்டிங் மூலம் உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications