சாலையோரம் கல்லை நட்டு வைத்து, சாமி என்று கூறும் மூடநம்பிக்கை நிலவுவது துரதிர்ஷ்டவசமானது.. ஐகோர்ட்
சென்னை: சாலையோரம் கல்லை நட்டு வைத்துவிட்டு, துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சாமி சிலை என்று கூறும் மூட நம்பிக்கை நம் சமூகத்தில் தொடர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நகரில் எனக்கு சொந்தமான நிலத்துக்கு முன்பு குமரேசன் என்பவர் ஒரு கல்லை வைத்திருக்கிறார்.

அதை சாமி சிலை என்று கூறி, அதை அகற்றவிடாமல் தடுத்து வருகிறார். இதுதொடர்பாக பல்லாவரம் சங்கர் நகர் போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டனர். எனவே நான் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கல்லை அகற்ற பல்லாவரம் தாசில்தாருக்கு பாதுகாப்பு வழங்க சங்கர்நகர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில், கல்லை அகற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது கல் அல்ல சாமி சிலையாக கருத வேண்டும் என்று எதிர் மனுதாரரரான குமரேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், அது கல்லா அல்லது சாமி சிலையாக மதிப்புக்கூட்டப்பட்ட சிலையா? என்று சிவில் கோர்ட்டால் முடிவு செய்ய முடியாது. அதிர்ஷ்டவசமாக கல்லா, சாமி சிலையா? என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்திய நீதித்துறைக்கு வழங்கப்படவும் இல்லை
ஆனால் இதுபோல சாலையோரம் கல்லை வைத்து, துணி சுற்றி, சாமி சிலை என்று கூறும் மூட நம்பிக்கை நம் சமூகத்தில் தொடர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கினால் சிவில் நீதிமன்றத்தின் நேரம்தான் வீணாகும், இந்த வழக்கால் எந்த ஒரு நல்ல பயனும் ஏற்படாது. எனவே, ஒரு வாரத்துக்குள் மனுதாரர் நிலத்துக்கு முன்புள்ள கல்லை அகற்ற வேண்டும். அதற்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications