"50,000 பேர் பணி நீக்கம்".. இன்னும் 2 மாதத்தில் எல்லாமே காலி.. அலறும் இந்திய ஐடி ஊழியர்கள்.. ஷாக்
சென்னை: ஐடி துறைக்கு தற்போது மோசமான காலமாக மாறி உள்ளது. தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்கள் நைசாக தொடங்கி உள்ளன.
ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல காலமாக இல்லை. ஏனென்றால் டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், அக்சென்ச்சர் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் டிசிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில் 2026ம் ஆண்டுக்குள் தனது பணியாளர்களில் 2 சதவீதம் அதாவது 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

இப்போது டிசிஎஸ் பணி நீக்க நடவடிக்கையை தீவிரமாக தொடங்கி உள்ளது. அதேபோல் தான் பிற ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதோடு, மறுக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதனால் எச்ஆரிடம் இருந்து போன் வந்தாலே ஐடி ஊழியர்கள் பயத்தில் தான் ‛அட்டெர்ன்' செய்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தான் 2025ம் ஆண்டில் நம் நாட்டில் ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 50 ஆயிரம் பேர் வரை பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையே 25 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு ஆளாகினர்.
ஆனால் இந்த ஆண்டு அது இரண்டு மடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணியை இழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஏஐ வருகையாகும். ஏஐ வருகையால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இதில் அதிகபட்சமாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபற்றி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் HFS ஆராய்ச்சியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் பில் ஃபெர்ஷ்ட் கூறுகையில், ‛‛ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் செயல்திறனை பொறுத்து பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஆட்கள் சேர்ப்பும் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் அமைதியான முறையில் ஏராளமானவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்னர்'' என்றார்.
டீம்லீஸ் டிஜிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி நீதி சர்மா, கூறுகையில், ‛‛2025ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் ஏஐ ஆகும். ஏஐ-யை பயன்படுத்துவதன் மூலமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைந்து அவர்களுக்கான சம்பளத்தை மிச்சப்படுத்தும் முனைப்பில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிகன்றன'' என்றார்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications