அடித்தது பாரு ஜாக்பாட்! ஐடி கம்பெனிகளும் மால்களும் செம ஹேப்பி.. சென்னை மெட்ரோவில் சூப்பர் வசதி
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த இரண்டாம் வழித்தடத்தில் சிஎம்ஆர்எல் அதிகாரிகள் புதியதொரு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் போக்குவரத்து என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. போக்குவரத்தைக் குறைக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக நகரில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மெட்ரோ
இருப்பினும், இவை போக்குவரத்தைப் பெரியளவில் கட்டுப்படுத்தவில்லை. வெளியே சென்றாலே டிராபிக்கில் குறிப்பிட்ட நேரம் சாலையில் நின்றே தீர வேண்டும் என்ற நிலையே இருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் காரணமாகவே இப்போது சென்னையில் மெட்ரோ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இப்போது சென்டரல் முதல் பரங்கிமலை வரை என்று இரண்டு வழித்தடங்களில் 40+ மெட்ரோ நிலையங்களுடன் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்னையில் மெட்ரோ ரயில்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது தவிர அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் என்று மொத்தம் 3 வழித்தடங்களில் மெட்ரோ விரிவுபடுத்தப்பட்ட உள்ளது.

புதிய திட்டம்
இதற்கிடையே இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் சிஎம்ஆர்எல் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. அதாவது, அதிகப்படியானோர் தினசரி மெட்ரோ பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஐடி பூங்காக்கள், பெரிய அலுவலகங்களுக்கு நேரடியாக ஸ்டேஷனில் இருந்து பாதை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே மால் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். பயணிகள் கீழே இறங்கி அந்த மாலுக்கு செல்லாமல், நேரடியாக மெட்ரோ நிலையத்தில் இருந்த மாலுக்கு செல்லும் வழியை ஏற்படுத்த உள்ளனர்.

எப்படி
பிரத்தியேக மேம்பாலம், நடைபாதைகளை அமைத்து இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளனர். மெட்ரோவின் இரண்டாம் கட்ட பாதை 2026 முதல் படிப்படியாகத் திறக்கப்படுகிறது. ஓஎம்ஆர் மற்றும் போரூரில் உள்ள பல ஐடி ஹப்புகளை இது இணைக்கிறது. இதனால் இந்தத் திட்டம் பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரத்தியேக பாதைகளை அமைக்கச் சம்மந்தப்பட்ட மால் அல்லது ஐடி அலுவலகங்களிடம் இதற்காகக் கட்டணம் வசூலிக்கும் ஐடியாவும் உள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூர் மெட்ரோ
ஏற்கனவே, பெங்களூர் மெட்ரோவில் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். அங்கே மெட்ரோ ஸ்டேஷன்களில் இருந்து நேரடியாக ஆபீஸ்களுக்கு செல்ல பாதைகள் ஏற்படுத்தியுள்ளனர். இந்த கார்ப்பரேட் பேக்கேஜ்கள்படி, இப்படித் தனி வழிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு 10 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்ற திட்டத்தைத் தான் சென்னையிலும் கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏன் முக்கியம்
இது பார்க்கச் சிறு திட்டம் போல இருந்தாலும், சிறப்பு வழிகள் என்பது மால்களுக்கு சூப்பர் செய்தி என்றே சொல்லலாம். இதன் மூலம் மெட்ரோவில் வருவோர் நேரடியாக மால்களுக்கு செல்வார்கள். ஐடி அலுவலகங்களுக்கு நேரடி பாதை அமைப்பதன் மூலம் நேரத்தைச் சேமிக்க முடியும். மேலும், இப்படிச் சிறப்புப் பாதை இருப்பதால், பிரதான நுழைவாயில்களில் கூட்டம் இருக்காது. இப்படிப் பல நன்மைகள் இந்தத் திட்டம் மூலம் கிடைக்கிறது.

அதிகாரிகள் கருத்து
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், "போரூர்-பூந்தமல்லி பாதையில் இதுபோன்ற பாதைகளை அமைக்க முன்வந்துள்ளோம்.. சாலைகளுக்கு மேலே அமையும் ஸ்டேஷன்களில் அருகே இருக்கும் நிறுவனங்கள், நடை மேம்பாலங்களை அமைப்பதன் மூலம் சிறப்புப் பாதைகளைப் பெறலாம். போரூர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் இது மிகப் பெரியளவில் பலன் தருவதாக இருக்கும். இதற்கு நல்ல பயன் இருந்தால், இதற்கான கட்டணத்தைக் குறைக்கவும் பரிசீலிப்போம்" என்றார்.

சிறப்புக் கதவுகள்
அதேபோல 2ஆம் கட்ட திட்டத்தில் நிலத்திற்கு அடியே அமையும் பிளாட்பார்ம் மற்றும் மேலே அமையும் பிளாட்பார்ம் என இரண்டிலும் பயணிகள் தண்டவாளங்களைக் கடப்பதைத் தடுக்கும் சிறப்புக் கதவுகளைப் பொறுத்த முடிவு செய்துள்ளனர். இப்போது பேஸ் 1 மெட்ரோ திட்டத்தில் நிலத்திற்கு அடியே இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த சிறப்புக் கதவுகள் இருக்கிறது. இதற்கான டெண்டர் சமீபத்தில் வெளியானது. சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications