Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கதை இது.. ‘இதான் உங்க ஊழல் ஒழிப்பா?’ - திமுகவோடு கைகோர்த்து பாஜகவை விளாசும் கமல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில், தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபணைக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசைச் சாடியும் கருத்து தெரிவித்துள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில், மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு தமிழக அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலுமணி டெண்டர் முறைகேடு

வேலுமணி டெண்டர் முறைகேடு

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 தமிழக அரசு ஆட்சேபணை

தமிழக அரசு ஆட்சேபணை

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஊழல் வழக்கில் வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனவும் தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நியாயமில்லை

நியாயமில்லை

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், "டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் (Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை.

 ஊழல் ஒழிப்பு - தோலுரிப்பு

ஊழல் ஒழிப்பு - தோலுரிப்பு

அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை குறித்தான வழக்குகளில் வருமான வரித் துறைக்காக வாதிடும் வழக்கறிஞர் ஒருவர் முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக வாதாடுவது முரண்பாடான நிலைப்பாடாகும். இதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாட்டை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது.

நீதியின் பாதையில்

நீதியின் பாதையில்

இந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், அனைத்து வழக்குகளிலும் எதிர்கட்சியினர், கூட்டணிக் கட்சியினர் என்ற பாகுபாடு இல்லாமல் "நீதியின் பாதையில்" வழக்குகள் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+