தலைமைச் செயலகத்தில் ரெய்டு..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி
சென்னை: தலைமை செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

காலையில் வாக்கிங் சென்ற அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனே டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தார். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவு பெற்றவுடன் பேசுகிறேன் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடப்பது வழக்கமான ஒன்று ஆனால் மாநிலத்தின் அதிகார மையமாக திகழும் தலைமை செயலகத்தில் சோதனை நடத்துவது என்பது ஆளும் அரசிற்கு சங்கடத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் அரிதாக நடக்கக்கூடியது.
கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக ராம மோகன் ராவ் இருந்த போது 21.12.2016 அன்று அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. அதன்பிறகு தலைமை செயலகத்தில் அவரது அறையில் சோதனை நடந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருக்க மாட்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது.
அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த மு.க ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக சாடி பேசினார். தமிழகத்தின் தன்மானச் சின்னமாக விளங்கும் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலேயே வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அந்த அளவுக்கு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து அத்துமீறி செயல்பட்ட பி.ராமமோகன ராவ். ரெய்டுக்குப் பிறகும் மாற்றப்படாமல் இருந்தார். வருமான வரி ரெய்டுக்குப் பிறகு திமுகவும் மற்ற கட்சிகளும் முன் வைத்த கோரிக்கைகளால் வேறு வழியின்றி ராம மோகனராவ் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்,என்று மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை அவர் மீது வேறு எந்த விதமான துறை ரீதியான நடவடிக்கையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. ரெய்டு நடைபெற்ற போது முதலமைச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும் அது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. சட்டமன்றத்தில் கூட இந்த ரெய்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் மு.க ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டு நடவடிக்கைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் அரங்கேறியுள்ளது. இந்த சோதனையில் அமலாக்கத்துறை, இந்தியன் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கொடுக்கும் வகையில் அமைச்சரின் உதவியாளர்கள் அறையில் இருக்கின்றனர். தற்போது அமைச்சரின் அறைக்கு உள்ளே தாளிட்டு கொண்டு சோதனை நடைபெற்றது.
முன்னதாக தனது நிகழ்ச்சிகளை முடித்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார். ஒரு சில அமைச்சர்களும், அதிகாரிகளும் தற்போது அங்கிருக்கின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த ரெய்டு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில்தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திற்குள்ளும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இப்போது முதல்வராக மு.க ஸ்டாலின் இருக்கிறார். தனது அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications