தமிழக அரசின் TNPFC அலுவலகத்தில் திடீர் ஐடி ரெய்டு.. ஃபைல்களை துருவி எடுத்த அதிகாரிகள்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு அரசின் மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசின் மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இங்கு, மின்சாரத்துறை உட்கட்டமைப்பை நிர்வகிப்பது, நிதியை துறை சார்ந்த பணிகளுக்கு அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். அங்கு, வருமான வரி சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@கடந்த ஆண்டு வருமான வரி அதிகமாக செலுத்திய நிலையில், நடப்பாண்டில் மிகவும் குறைவாக செலுத்திய காரணத்தினால் வருமான வரி சரிபார்ப்பு தொடர்பாக அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக TNPFC சேர்மன் அம்பலவாணன் ஐஏஎஸ்-இடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications