லாட்டரி மார்ட்டினை சுற்றும் ரெய்டு.. முன்னே வந்த அமலாக்கத்துறை.. பின்னே வந்த வருமான வரித்துறை
சென்னை: தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கோவையிலும் உள்ள மார்ட்டின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
2009 - 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மார்ட்டின், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தனர். மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் பல்வேறு கட்டங்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை முடக்கியது. இதுவரை மார்ட்டினுக்குச் சொந்தமான 908 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மார்ட்டின் தொடர்பான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல காந்திபுரம் பகுதியில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான லாட்டரி அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா?, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் கேசியராக பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications