சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. யாருக்கு குறி?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்கு தொடர்பாக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கேகே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோபாலபுரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கே.கே. நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது, அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications