வரும் போது ஷால் போட்டுட்டு வா.. சென்னை, திருச்சி, மதுரையில் எல்லாம் காதலிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு குறும்படம் ஒன்று இந்த வெயிலை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.காதலர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் உரையாடலாக அந்த வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. வீடியோவை பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் வெயில் கொடூரமாக இருக்கிறது. 104 டிகிரி செல்சியஸ் முதல் 108 டிகிரி என்கிற அளவிற்கு சர்வசாதாரணமாக வெப்பநிலை தமிழகத்தில் பதிவாகி வருகிறது. இதில் உச்சகட்ட சோகமே சென்னைக்குத்தான்.. மற்ற ஊர்களில் எல்லாம் வெயில் அடித்தாலும்,, அவ்வப்போது மழையும் வந்து செல்கிறது.

Its very difficult to fall in love in Chennai, Trichy and Madurai because of the summer heat!

ஆனால் சென்னையில் அதுவும் இல்லை. சென்னை கான்கிரீட் காடுகள் என்பதால் மரங்களையே அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். புறா கூடுகளை போல் வீடுகள் நெருக்கமாக அமைந்திருப்பதால் ஏசி இல்லை. இங்கு பல பேருக்கு இதயமே நின்றுவிடும். கடற்கரையோர நகரம் தான் என்றாலும் கடல் காற்று கூட புகுந்து வரமுடியாத அளவிற்கு மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். சென்னை, மதுரை, திருச்சி,சேலம் போன்ற நகரங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கிறது. இதை வைத்து காதலர்கள் இருவர் பேசிக்கொள்வதாக குறும்பட வீடியோ இருக்கிறது. அதில் காதலன் காதலியிடம் கிளம்பிட்டயா என்று கேட்கிறார். அதற்கு காதலி, கிளம்பிட்டேன் என்று கூறுகிறார்.

அதன்பிறகு சுடிதாருக்கு ஷால் போட்டிருக்கிறாயா என்று காதலியிடம் காதலன் கேட்கிறார். அதற்கு அந்த பெண் சுடிதாரில் ஷால் போடவில்லை என்கிறார். அப்போது காதலன், கண்டிப்பாக ஷால் போட்டுத்தான் வர வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். அதற்கு காதலி, ஏன் என்னுடைய விஷயங்களில் தலையிடுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு காதலன் ஷால் அணிந்தால் வா, இல்லாவிட்டால் வர வேண்டாம் என்று கூறுகிறார். இறுதியாக ஷால் உடன் அந்த பெண் பைக்கிற்கு செல்கிறார். காதலன் ஷாலை வாங்கி பைக் சீட்டில் வைத்துக்கொள்கிறார். காதலி உடனே கோபப்பட்டு இதற்கா என்னை ஷால் போட்டு வரச்சொன்ன என்று கோபப்படுகிறார். இறுதியாக அவர் பைக் சீட்டில் உட்காருகிறார். அப்போது தான் தெரிகிறது. வெயிலின் கொடுமை. இனி ஒரு ஷால் இல்லை. இரண்டு ஷால் எடுத்து வர வேண்டும் என்று சொல்லி நொந்து கொள்வார். இப்படியாக குறும்படம் முடிகிறது.

வெயிலின் கொடுமையை மக்களுக்கு காட்டுவதாக இந்த குறுப்படம் இருக்கிறது. இந்த குறும்படம் ட்விட்டரில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+