ஆணவப் படுகொலை செய்ததே அதிமுக கிளைச் செயலாளர் தான்! ஸ்டாலின் அளித்த பதிலால் சட்டசபையில் கடும் அமளி!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகன் என்ற இளைஞரை ஆணவப் படுகொலை செய்தவர் அதிமுக கிளைச் செயலாளர் என முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு, கொலை செய்த பெண்ணின் தந்தை அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்பதை எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்தார்.
சட்டசபை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் கூச்சல் குழப்பம் நிலவியதால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆணவப் படுகொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கூட் ரோடு அருகே நேற்று முன் தினம் பட்டப்பகலில் ஜெகன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் சரண்யா என்ற மாணவியை ஜெகன் கோவிலில் வைத்து திருமணம் செய்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற அந்தப் பெண்ணின் தந்தை சங்கர் இந்த கொலைச் சம்பத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவதாகவும் கூறினார்.

அதிமுக கிளைச் செயலாளர்
மேலும் ஜெகனை கொலை செய்த சங்கர் மீது காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சங்கர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்ல கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கர் அதிமுக கிளை செயலாளர் என்ற தகவலையும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். கொலையாளியை அதிமுக கிளைச் செயலாளர் என ஸ்டாலின் கூறியதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எழுதிக் கொடுங்கள்
இதனால் சில நிமிடங்கள் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு, கொலை செய்த பெண்ணின் தந்தை அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்பதை எழுதிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். அதன் பிறகும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் உடனே எழுந்து பேசிய அவை முன்னவரான துரைமுருகன் , காவல்துறை அறிக்கையில் இருந்ததை தான் முதல்வர் பேசியிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.

மிகப் பெரிய ட்விஸ்ட்
கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலையை நிகழ்த்தியதே அதிமுக கிளைச் செயலாளர் தான் என முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம் இந்த வழக்கில் மிகப் பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications