பூதாகரமாகும் பூணூல் விவகாரம்.. இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு! ஆளுநரால் கோபமான பாலகிருஷ்ணன்
சென்னை: கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்பு 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்நிலையில் தான் இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவியின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆதனூர் கிராமம் உள்ளது. இங்கு தான் நந்தனார் பிறந்தார். இந்த நிலையில் ஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார்.

விழாவில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் 100 ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது தான் சனாதனம். மேலும் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?. பூணூல் அணிவிக்கப்பட்ட பட்டியலின மக்களை கோயில் பூசாரி ஆக்குவாரா?'' என கேள்விகள் எழுப்பி இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில் பட்டியல் சாதி மக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்பட்டதும் அதில் ஆளுநர் பங்கேற்றதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதியில் நுழைய விரும்பிய அவரை நெருப்பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது. அவரை தீயிட்டு கொளுத்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியல் சாதியினருக்கு அவரது பிறந்த நாளில், அவரது மண்ணில் பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும்.
இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம் பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம் என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தும் இந்தச் செயலை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது'' என கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications