சவால்களுக்கு மத்தியிலும் சாதுர்ய முடிவு! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பாராட்டு
சென்னை: நிதி பற்றாகுறை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவித்தமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறாததை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் இயக்கங்களும், அறிக்கை வெளியிட்டன. தமிழக விவசாயிகளின் சார்பாக கரும்பையும் இணைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.71 கோடி செலவு ஏற்படும். தமிழகத்தில் நிதிநிலை பற்றாக்குறையும் உள்ளது.
இதுபோன்ற சவால்களுக்கு மத்தியிலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, தமிழக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று போற்றப்படும் விவசாயிகளின் மனக்குறையை நீக்கும் பொருட்டும் இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளதை தமிழக மக்கள் அனைவரும் மனமகிழ்ந்து வரவேற்று பாராட்டுகின்றனர்.
தமிழக முதல்வரின் 'திராவிட மாடல்' ஆட்சி நாள்தோறும் எழுச்சி கண்டு வருவதற்கு இந்த அறிவிப்பு ஓர் அத்தாட்சியாகத் திகழ்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக மனமுவந்து வரவேற்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications