எல்லோரும் ஒரு தாய் மக்கள்! இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாக தீபாவளி! காதர் மொகிதீன் வாழ்த்து!
சென்னை: இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாகத் தீப ஒளி திருவிழா அமைந்திருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :

தீப ஒளி திருவிழா கொண்டாடும் தமிழகத்து இந்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாகத் தீப ஒளி திருவிழா அமைந்திருக்கிறது. விண்ணிலும் மண்ணிலும் மண்டியிருக்கும் இருளை ஓட்டும் ஒளியை விட, இதயத்தைக் கவ்வியிருக்கும் இருளை அகற்றும் ஒளியே மானிடருக்குப் பெரும் நன்மை தருவதாகும். அதனால் தான் இதனை "உள்ளிருளைப் போக்கும் ஒளி" என்று ஆன்மீகப் பெரியோர் கூறி வந்திருக்கிறார்கள்.
இன்றைய மனித சமுதாயத்தில் அறியாமை, கல்லாமை, இல்லாமை, சமூக சுமூகம் இல்லாமை, பொறாமையும் ஒருவருக் கொருவர் கொண்டுள்ள பகைமையும் , வன்முறையும் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது, இவற்றுக் கெல்லாம் முடிவும் விடிவும் ஏற்படுத்தக் கூடிய அறிவொளியும், நல்லெண்ண ஒளியும், சமுதாய சௌஜன்ய ஒளியும், ஏற்பட வேண்டும் என்ற பிரார்த்தனை நடத்திட வேண்டிய காலம் இது.
இக்காலத்தில் வந்திருக்கும் தீப ஒளி திருவிழா மனித நேயத்தை வளர்க்கும் மனவெளிச்சத்தை தரும் விழாவாக ஆசிப்போம்; எல்லோரையும் ஒரு தாய் மக்களாக நேசிப்போம் - எங்கும் எதிலும் இறையருள் நிறைந்திட யாசிப்போம். இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications