அமோக வரவேற்பில் சிற்றுண்டி திட்டம்! தமிழக பள்ளி உணவு திட்டங்களின் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்!
சென்னை: தமிழக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன் இன்று முதல் காலை உணவுத் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் இளம் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும்; கல்விதான் ஆகப் பெரும் சொத்து என்கிற நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1920-ம் ஆண்டு திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சர்.பிட்டி தியாகராயர், தாம் சென்னை மேயராக இருந்த போது நகராட்சிப் பள்ளியில் அதிகாரப்பூர்வமாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுதான் தமிழக வரலாற்றில் ஒரு அரசு நிர்வாகம் மாணவர்களுக்கு முதன் முதலாக இலவச உணவு வழங்கிய திட்டமாகும்.
ஆனால் அதற்கு முன்னரே இத்தகைய ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் அயோத்திதாசப் பண்டிதர். 1892-ம் ஆண்டு சென்னையின் அடையாறு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளை தொடங்கினார் அயோத்திதாச பண்டிதர். இதற்கு உறுதுணையான இருந்தவர் ஆங்கிலேயரான கர்னல் ஆல்காட். இவர்தான் பிரம்மஞான சபையை உருவாக்கியவர். சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் கீழ் இன்றும் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஆல்காட் குப்பம் என்பதும் இன்றளவும் அவரது பெயரை தாங்கி இருக்கிறது.
ஆங்கிலேயர் ஆல்காட் துணையுடன் அயோத்திதாசப் பண்டிதர் உருவாக்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பள்ளிகளில் 1894-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டு வரை இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. இதன்பின்னர் 1920-ல் சர் பிட்டி.தியாகராயர் ஆயிரம் விளக்கு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் குறித்து அயோத்திதாசர் இப்படி குறிப்பிடுகிறார்.. " மத்தியானத்தில் பொசிப்பில்லா ஏழை சிறுவர்களுக்கு சிறுதிண்டியும் புசிப்புமளித்து வருவதுடன் அம்மை பால்மர் துரைசானியிருக்குமளவும் ஏழை சிறுபிள்ளைகளுக்கு வேண்டிய உடைகளுந்த் தைத்து உடுத்திவந்தார்கள் என்கிறார் அயோத்திதாசர். இப்பள்ளிகளில் 700க்கும் மேற்பட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.
இப்படி அன்று அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்டு சர்.பிட்டி தியாகராயாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் நாடு விடுதலைக்குப் பின்னர் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர்., ஜெயலலிதா என அனைத்து முதல்வர்களாலும் செழுமைப்படுத்தப்பட்டது. தற்போது இதன் உச்சமாகவே காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications