எப்ப போன் பண்ணாலும் எடுப்பார்.. கால் மிஸ்ஸே ஆனதில்லை.. ஜெ. அன்பழகனை நினைவு கூறும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் மிஸ்டு காலாக செல்லாத ஜெ அன்பழகனின் எண் என அவரது சேவை மனப்பான்மையை நினைவுக்கூருகின்றனர்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ அன்பழகன். இவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவு

தீவிர சிகிச்சை பிரிவு

கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெ அன்பழகன் நடுவில் சில நாட்கள் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவர் 80 சதவீத செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

இதனால்அவர் விரைவில் நலம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் இன்று காலை மோசமடைந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவரை ஸ்டாலின் சென்று மருத்துவமனையில் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் அவர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார்.

மென்மை

மென்மை

இதனால் திமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக இருந்தவர். கருணாநிதியிடம் மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர் என்றும் அவரும் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தோன்றினாலும் மிகவும் மென்மையானவர் என திமுகவினர் நினைவுகூர்கின்றனர்.

உழைப்பு

உழைப்பு

தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வரை அவர் மக்களுக்காகவே உழைத்து கொண்டிருந்தார். தொகுதி மக்கள் தங்களுக்கு பிரச்சினை என கூறி அன்பழகனுக்கு போன் செய்தாலே போதும் அவர்களது பிரச்சினை தீர்ந்து விட்டதாகவே நினைத்துக் கொள்ளலாம். இதுவரை அவருக்கு போன் செய்து அந்த போன் மிஸ்டுகாலாக சென்றதே இல்லை என அவரது தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+