தியாகராய நகர் தொகுதி யாருக்கு? ஸ்டாலின் முன்னிலையில் ஜெ. அன்பழகன் குடும்பத்தினர் பஞ்சாயத்து
சென்னை: திமுகவில் சென்னை தியாகராய நகர் தொகுதி (தி.நகர்) யாருக்கு என்பது தொடர்பாக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மறைந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் குடும்பத்தினர் பஞ்சாயத்து செய்தனராம்.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் மக்கள் பிரதிநிதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ. அன்பழகன். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

ராஜா அன்பழகனுக்கு பதவி
ஜெ. அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் ராஜா அன்பழகனுக்கு சென்னை மேற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.

தி.நகருக்கு விருப்ப மனு
இந்த நிலையில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு ராஜா அன்பழகன் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஆனால் ஜெ. அன்பழகனின் உடன்பிறந்த தம்பியான குட்டி என்ற கருணாநிதி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். ராஜா அன்பழகனுக்கு சீட் கொடுத்தால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும் என்கிறாராம்.

ஸ்டாலினிடம் வேண்டுகோள்
இதையடுத்து ஜெ. அன்பழகனின் மனைவி நேராக மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். கட்சிக்காக பணி செய்துதானே என் கணவரை பறிகொடுத்தேன். என் மகனுக்கு இப்ப நீங்க சீட் கொடுத்துதான் ஆகனும் என கண்ணீர்மல்க பேசியிருக்கிறாராம். இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறாராம்.

தி.நகரில் கடும் போட்டி
அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக இங்கு நிற்பதால் கடும் போட்டி உருவாகும். அதேநேரத்தில் ஜெ. அன்பழகன் குடும்பத்தினருக்கு சீட் கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்பதில் கட்சி தலைமை தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அந்த குடும்பத்தினர் மீது அதிருப்தி இருப்பதையும் தலைமை கவனத்தில் கொண்டால் நல்லது என்கிற கருத்தையும் திமுகவினர் முன்வைத்துள்ளனர்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications