அத்தைக்கு உதவியா இருந்திருப்பாங்க.. அதுக்காக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட சொத்தில் உரிமை இல்லை- ஜெ தீபா
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை வாங்க சசிகலா முயற்சித்து வருவதாகவும் அந்த வீட்டில் விரைவில் அவர் குடியேறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானதை ஜெ தீபா மறுத்துள்ளார்.
ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது அண்ணன் மகள் தீபாவும் தீபக்கும் சட்ட போராட்டம் நடத்தி அந்த சொத்தை திரும்ப பெற்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.
Recommended Video

ஜெயலலிதா
அதில் ஜெயலலிதாவின் வீட்டை வாங்குவதற்கு தொழிலதிபர்கள் சிலர் ஆர்வம் காட்டினார்கள என்றும் சட்ட சிகிச்சை உள்ளிட்டவைகளால் அந்த வீட்டை வாங்கும் எண்ணத்தை கைவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால ஜெயலலிதா வீட்டை சசிகலா வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக ஒரு அறக்கட்டளையை சசிகலா நிறுவி அதன் மூலம் ஜெயலலிதா வீட்டை வாங்கவும் திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டன.

சசிகலா
ஒரு வேளை ஜெயலலிதா வீட்டை சசிகலா வாங்கிவிட்டால் அவர் விரைவில் போயஸ் தோட்ட இல்லத்தில் குடியேறுவார் என உறுதி இல்லாத செய்திகள் வந்தன. இதனை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா மறுத்தார். அவர் கூறுகையில் வேதா நிலையமானது எனது பாட்டி சந்தியாவால் சம்பாதித்து கட்டப்பட்டது.

உரிமை கோர முடியாது
இது எங்கள் பூர்வீக சொத்து. இதை யாரும் உரிமை கோர முடியாது. என்னை பொருத்தவரை எனக்கு அத்தை மட்டும்தான் தேவை. அவருடன் யார் இருந்தார், யார் போனார் என்பெதல்லாம் எனக்கு தேவையில்லை. எனது அத்தை பல பிரமிக்கத்தக்க பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்தவர். அப்படி இருந்த போது அவருக்கு உதவி செய்ய , பணிவிடை செய்ய, ஆலோசனை சொல்ல, என ஆயிரக்கணக்கானவர்கள் பயணித்திருப்பார்கள்.

சசிகலாவுக்கு பொருத்தமானது
அதற்காக அவர்கள் எல்லாம் உரிமை கோர முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது. ஜெயலலிதாவுடன் பயணித்ததாக சொல்லும் சசிகலாவுக்கு இது பொருத்தமானது. எனவே வதந்திகளை யாரும் கிளப்ப வேண்டாம். வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல என ஜெ தீபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications