சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்.. போராடியது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசை போஸ்டரில் வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம்- வீடியோ

    சென்னை: தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து ஜெ.தீபா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டம் 100 நாட்களை எட்டியவுடன் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

    அப்போது அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.எனினும் அவர்கள் முன்னேறிக் கொண்டே சென்றதால் போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

    இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க அனுமதி கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    அப்போது அந்த தீர்ப்பாயம் அனுமதி கொடுத்தது. மேலும் இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதற்கு தமிழகமே கடும் கொந்தளிப்பில் உள்ளது. மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கியது.

    முட்டாள்கள்

    முட்டாள்கள்

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்கள் முட்டாள்கள் என்று தமிழிசை கூறியதாக தெரிகிறது.

    ஊசி நூல் கொண்டு

    இதை கண்டித்தும் ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக மக்களை முட்டாள்கள் என கூறிய தமிழிசையின் வாயை தைக்க வேண்டும் என கூறிய அவர்கள், அவரது உருவம் கொண்ட போஸ்டரில் அவரது வாயை ஊசி நூல் கொண்டு தைத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    J.Deepa party protest against Tamilisai for her comment on Anti Sterlite industry in a new way. This video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X