Exclusive: அத்தையோட ஆன்மா என்னை கைவிடவில்லை; ஸ்டாலின் மேல்முறையீடு செய்யமாட்டார் -உருகும் ஜெ.தீபா!
சென்னை: மறைந்த தனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா தன்னை கைவிடவில்லை என உருகுகிறார் ஜெ.தீபா.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அது தொடர்பாக ஜெ.தீபாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

அத்தையின் ஆன்மா
''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன்.''

ஸ்டாலின் மீது நம்பிக்கை
''நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புகிறேன். அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும். இது ஆரம்பக்கட்டம், இப்போதே உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லமுடியாது. இன்னும் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளதால், அது முடிந்தபின்னரே அத்தை வீட்டுக்கு செல்வது பற்றி என்னால் பேசமுடியும்.''

வேதா நிலையம்
''வேதா நிலையம் இல்லம் வாரிசுகளான எங்களுக்கு சேர வேண்டும் என்பதே மறைந்த எனது மூதாதையர்களின் விருப்பமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை, அவரை சந்திப்பது குறித்து நான் யோசிக்கக் கூட இல்லை. இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான், இருப்பினும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அத்தை மட்டுமல்ல எனது அப்பாவும், பாட்டியும் கூட அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்.''
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
''இந்த தருணத்தில் பழசை பற்றி பேசவிரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தனி நபராக இதை செய்யவில்லை, அரசாங்க ரீதியில் முடிவெடுத்து அத்தை இல்லத்தை அரசுடைமை ஆக்கினார். இது குறித்தும் இன்னும் நான் பேசினால் அது அரசியல் பேசுவது போல் ஆகிவிடும், அதனால் அதை விட்டுவிடுவோம்.'' எனக் கூறினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications