மம்தா ஆட்சிக்கு நாட்கள் நெருங்கிடுச்சி.. துர்காதேவிதான் என்னை காத்தார்.. ஜே பி நட்டா
சென்னை: துர்க்கையின் அருளால் நான் தப்பித்தேன் என்று மேற்கு வங்கத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சென்றார்.
டைமண்ட் ஹார்பருக்குச் சென்ற ஜே பி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். இதில் பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா காயமடைந்தார்.

அதிர்ச்சி
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நட்டா கூறுகையில் நான் பார்த்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியாகவே உள்ளது. இதற்கு முன் எப்போதும் இது போல் நடந்ததில்லை.

தாக்குதல்
மேற்கு வங்கத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சகிப்புத்தன்மையும் இல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது. இந்த தாக்குதலில் எனக்கு காயமே ஏற்படவில்லை. நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தேன்.

ஆசி
ஆனால் பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்து பாருங்கள். ஏதோ துர்காதேவியின் ஆசியால்தான் தற்போது நான் இந்த கூட்டத்தில் பேசுகிறேன்.

குண்டர்கள்
மாநிலத்தில் பாஜக கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பை நினைத்தால் எனக்கு கவலையாகவே இருக்கிறது. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எண்ணப்பட்டு வருகின்றன. இந்த குண்டர்களின் ஆட்சியை நாம் தோற்கடிப்போம்.

அரசியல் நாடகம்
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் மிகவும் கீழான நிலைக்குச் சென்றுவிட்டது என்றார் நட்டா. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சுப்ரஜா முகர்ஜி கூறுகையில் அரசியல் நாடகங்களை அங்கேற்றி மக்களை பாஜக ஏமாற்றுகிறது. இந்த தாக்குதல் எல்லாம் பொய்யானவை, முன்பே திட்டமிட்டவை என்றார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications