சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை.. இதமான செய்தி அளித்த சுகாதாரத் துறை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா 2 அலைகள் வந்தன. இதில் முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமடைந்தது.

இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் இந்தியாவில் 3 அலை நவம்பர் மாதம் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் நவ்மபர் மாதம் முடிவடையும் நிலையில் 3-ஆவது அலைக்கான அறிகுறி இல்லாமல் இருந்தது.

கொரோனா பாதிப்பு.. பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார் கொரோனா பாதிப்பு.. பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 3ஆவது அலை பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓமிக்ரான் 50 பிறழ்வுகளை கொண்டதால் இது கொடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டா வேரியண்ட்

டெல்டா வேரியண்ட்

அது போல் இது டெல்டா வேரியண்ட்டை விட மிக மோசமாகவும் வேகமாகவும் பரவி வருகிறது. பெங்களூருக்கு வந்த தென்னாப்பிரிக்கர்கள் இருவருக்கு ஓமிக்ரான் வேரியண்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் நுழையாமல் இருக்க சுகாதாரத் துறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கெனவே தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Recommended Video

    Omricon Covid variant from South Africa Triggers World | OneIndia Tamil
    பரிசோதனை

    பரிசோதனை

    அது போல் காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை மீண்டும் 8 நாட்களுக்குபின் பரிசோதிக்குமாறும் அவர்களை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தும்படியும் ஏற்கெனவே மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு யாருக்கும் இல்லை. கொரோனா இல்லை என்பதால் மக்கள் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.

    English summary
    Health Department Secretary J Radhakrishnan says that there is no Omicron affected person in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X