விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. சாதனை படைத்த கூட்டுறவு சங்கம்! பயிர்க் கடனில் அசத்திய முதல் டாப் ஊர் இது
சென்னை: கிராமங்களில் அமைதியாக நடந்த ஒரு முயற்சி பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது என்றால் அது பயிர்க்கடன் திட்டம்தான்.. விவசாயிகளின் கையில் நேரடியாக நிதி வலிமை சேர்க்கும் அமைப்பு இப்போது கவனத்தை ஈர்க்கிறது. சாகுபடி காலத்தில் நம்பிக்கையாக மாறிய இந்த திட்டம் பல இடங்களில் சாதனையை படைத்து வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு குட் நியூஸ் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு மிக அருகாமையில் செயல்படும் இந்த சங்கங்கள், சாகுபடி காலங்களில் அவசரமாக தேவைப்படும் நிதி உதவியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கூட்டுறவு வங்கி நகைக்கடன்
பயிர் கடன், நகைக்கடன், விவசாயம் சார்ந்த பிற கடன்கள் என பல்வேறு பிரிவுகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன. லட்சக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 46,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டதாக கூட்டுறவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பங்காற்றுவது National Bank for Agriculture and Rural Development ஆகும். இந்த தேசிய வங்கி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் வழங்காது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன்
மாறாக, மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மறுகடன் வழங்குகிறது. இதன் மூலம் கிராம மட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கும் எளிதாக வங்கி கடன் கிடைக்கிறது.
குறிப்பாக, உரிய காலக்கெடுவுக்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்படும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வட்டிச்சுமை குறைந்து, சாகுபடி தொடக்கச் செலவுகளை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது.
இந்த திட்டங்களின் பயனை தெளிவாக காட்டும் எடுத்துக்காட்டாக ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் உள்ளன. இவ்விரு தாலுகாக்களிலும் மொத்தம் 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
பட்டா சிட்டா அடங்கல்
விவசாயிகள் பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல் மற்றும் இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் சங்கங்களை அணுகி கடன் பெற்று வருகின்றனர். முன்பு பெற்ற கடன்களை தாமதமின்றி திருப்பிச் செலுத்தி, மறுபடியும் புதிய பயிர் கடன்களை பெற்று சாகுபடி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் வெளியிடப்பட்ட பயிர் கடன் வழங்கல் இலக்கு தரவரிசைப் பட்டியலில் தும்படைக்காகோட்டை கூட்டுறவு சங்கம் ரூ.8.71 கோடி வழங்கி முதலிடம் பெற்றுள்ளது.
ஆண்டாவூரணி கூட்டுறவு சங்கம் ரூ.8 கோடி வழங்கி இரண்டாம் இடத்தையும், தொண்டி கூட்டுறவு சங்கம் ரூ.6.73 கோடி வழங்கி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த சாதனைகள் கூட்டுறவு அமைப்புகள் சரியான முறையில் செயல்பட்டால், கிராமப்புற விவசாய வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வலுவான ஆதாரமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications